Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்நாட்டில் கார்களின் விற்பனை குறைவு!

நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு கார்களின் விற்பனை 2.55 % குறைந்து 1,59,036 யூனிட்களாக இருக்கிறது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,63,199-யூனிட்களாக இருந்தது. அதே போல மோட்டார் சைக்கிள் விற்பனையும் 8.73% குறைந்து 10,08,761-யூனிட்களாக இருக்கிறது. இதுவும் சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 11,05,269 யூனிட்களாக இருந்தது.

மொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனை 3.61 சதவிகிதம் குறைந்து 14,61,712 யூனிட்களாக இருக்கிறது. அதே போல வர்த்தக வாகனங்களின் விற்பனையும் 2.97% குறைந்து 51,965 யூனிட்களாக இருக்கிறது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close