Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரியல் எஸ்டேட் : சென்னை முதலிடம் !

 

செப்டம்பர் மாதத்தோடு முடிந்த மூன்றாவது காலாண்டில் ரியல் எஸ்டேட் துறையில் 166  புதிய புராஜெக்டுகள் தொடங்கப்படுள்ளதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 
குஷ்மேன் வாக்ஃபீல்டு தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின்  8 முக்கிய நகரங்களில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றும், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக  45 புராஜெக்டுகளும், அகமதாபாத்தில் மிக குறைவாக  5 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதகாவும் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம். 
 
குடியிருப்புச் சந்தைகள் குறித்து இந்த  நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவின்படி, கடந்த  ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கட்டுமான நிறுவனங்கள் அறிவித்த  திட்டங்களில் 21 சதவிகித திட்டங்கள் கைவிடப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. 

ஆய்வு நடத்தப்பட்ட இந்த எட்டு நகரங்களில் வாங்கக்கூடிய விலையில் வீடு கட்டுவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 50 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தப் பிரிவில் தேவை என்பது அதிகமாக இருந்தாலும், பல்வேறு காரணங்களினால் வாங்கக்கூடிய விலையில் வீடுகளை கட்டித் தரமுடியவில்லை என பில்டர்கள் தரப்பில் சொல்வதையும் இந்த ஆய்வு எடுத்துக் கூறியிருக்கிறது.

நடுத்தரப் பிரிவில் புதிய கட்டுமானத் திட்டங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 14% குறைந்துள்ளன. அதிக விலை கொண்ட வீடுகள் கட்டுவதுகூ கடந்த ஆண்டைவிட 10 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 
 
இது குறித்து பேசிய குஷ்மேன் வாக்ஃபீல்டு நிறுவனத்தின் இணை இயக்குநர் ஸ்வேதா ஜெயின், "எல்லா நகரங்களிலும் ரியல் எஸ்டேட் சந்தை தொய்வாக இருந்தாலும், மக்கள்  வீடு  வாங்குவதற்கான முனைப்புகளில்தான் உள்ளனர். இதனால் சற்று மெதுவாகத்தான் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி கண்டு வருகிறது. புதிய திட்டங்களை அறிவிக்கும் கட்டுமான நிறுவனங்கள் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் தெரிந்துகொண்டு அறிவிக்க வேண்டும். முக்கியமாக, சின்ன சின்னத் திட்டங்கள் தொடங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்'' என்றும் தெரிவித்துள்ளார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ