Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் இரண்டு மடங்காக அதிகரிப்பு!


பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டு மடங்குமேல் அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.96.4 கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.174.50 கோடியாக உயர்ந்துள்ளது. 


மேலும், இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் 34.7% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.845 கோடி வருமானம் ஈட்டியது. ஆனால், இந்த ஆண்டின் கடந்த காலாண்டில் ரூ.1138.30 கோடியை ஈட்டியுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP