Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் பங்குச் சந்தை!

இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 35 புள்ளிகள் உயர்ந்து 27910 என்ற  நிலையில் முடிவடைந்தது. அதே போல தேசிய பங்குச் சந்தை 18 புள்ளிகள் உயர்ந்து 8362 என்ற  நிலையில் முடிவடைந்திருக்கிறது.


டாப் 5: விலை ஏற்ற பங்குகள்!

பிஎன்பி                                954.05 3.41
பேங்க் ஆஃப் பரோடா      1,012.05 2.74
ஐடிஎஃப்சி                        155.00 2.68
அல்ட்ராடெக் சிமெண்ட்      2,646.60 2.54
எம்&எம்                             1,260.55 2.41
 

 
டாப் 5: விலை இறக்கப் பங்குகள்!

பிஹச்இஎல்    245.30 -2.23
ஐடிசி                364.10 -2.04
பாரதி ஏர்டெல் 385.00 -1.60
என்எம்டிசி        157.00 -1.47
கெய்ர்ன் இந்தியா 273.85 -1.40
 

 01.00 மணி நிலவரம். 

சந்தை தொடர்ந்து ஏற்றமாக வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 26.00 புள்ளிகள் ஏற்றம் கண்டு 27 899 (0.09%) என்கிற நிலையிலும்,  தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 6.00 புள்ளிகள் உயர்ந்து 8350 (0.08%) என்கிற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில்  அட்ராடெக் சிமெண்ட் (2.25), மஹேந்திரா அண்டு மஹேந்திரா (2.02),
ஐடிஎஃப்சி (2.35), ரிலையன்ஸ்  (1.68), கெயில்  (1.52) ஆகிய நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன.
 
பிஹெச்இஎல் (-2.67),  பார்ர்தி ஏர்டெல் (-1.34), இன்ஃபோசிஸ் (-1.31 ) என் எம் டிசி (-1.51 ) ஐடிசி (-1.25), நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
  
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.59 ஆகவும். 10 கிராம் தங்கத்தின் விலை 25,578 ஆகவும் உள்ளது.  

 

11.00 மணி நிலவரம்:
இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை 11.00 மணி அளவிலும் தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 48.63 புள்ளிகள் உயர்ந்து 27923.36 (0.17%) என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 16.25 புள்ளிகள் உயர்ந்து 8360.50 (0.19%) என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

இந்நிலையில் அட்ராடெக் சிமெண்ட் (2.17), ஐடிஎஃப்சி (2.15), கெய்ல் (1.54), மஹேந்திரா அண்டு மஹேந்திரா (1.51), டாடா ஸ்டீல் (1.47) ஆகிய நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்தும், பிஹெச்இஎல் (-2.65), என்எம்டிசி (-1.88), பார்ர்தி ஏர்டெல் (-1.53), டிஎலெஃப் (-1.36), ஐடிசி (-1.05) ஆகிய நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
 

காலை 9:45 மணி பங்குச் சந்தை நிலவரம்

 

 இன்று காலை துவங்கிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 27943 என்ற அளவில் வர்த்தகமானது. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 74 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 20 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.54 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை 0.7 சதவிகிதம் சரிந்து 25,733 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதும், ரூபாயின் மதிப்பு நேற்றைய நாளின் இறுதியை விட சற்று சரிந்துள்ளதும் இந்த நிலையான ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகின்றன.
 
இன்று 495 பங்குகள் விலை அதிகரித்தும், 152 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. குறிப்பாக ஜின்டால் ஸ்டீல், டாடா ஸ்டீல் பங்குகள் விலை அதிகரித்தும், கேல் இந்தியா, ஐடிசி நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP