Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2017-18-ம் ஆண்டில் ஐடி வேலைகள் 50% குறையும்!

ஐடி துறையில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு புதி வேலை வாய்ப்புகள் 50% குறையும் என்று கிரிஸில் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு கணிப்பின் படி 2017-18-ம் நிதி ஆண்டில் ஐடி துறையில் பணியாட்களை புதிதாத பணி அமர்த்துமவது 1.05 லட்சத்திலிருந்து 55,000-ஆக குறையும் என்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 31 லட்சம் பணியாளர்கள் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார்கள். இது அனைத்து தனியார் துறைகளுடன் ஒப்பிடும் போது 24% ஆகும்.

கிரிஸில் அமைப்பு சொல்லி இருப்பது போல ஐடி துறையில் பணியாளர்கள் பணி அமர்வானது குறைந்தால் பொதுவான வேலை வாய்ப்பு அதிகரிப்பை பாதிக்கும் எனவும் இதன் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், விப்ரோ போன்ற ஐடி நிறுவனங்களின் நான்கில் மூன்று சதவிகிதம் வருமானம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கிறது. ஆனால் அந்த நாடுகளின் பொருளாதார நிலை மோசமான நிலையில் இருந்து வருவதால் ஐடி நிறுவனங்களுக்கு கொடுக்கும் ஊதியத்திற்கான கட்டணத்தை குறைக்கச் சொல்லி கேட்டு வருகின்றன.


இன்றைய நிலையில் ஐடி நிறுவனங்கள் பணியாளர்களுக்கு கொடுக்கும் சம்பளம் அவர்களின் அதிகபட்ச செலவினமாக இருந்து வருகிறது. அவர்களுக்கு வேலை தரும் நாடுகள் ஊதிய கட்டணத்தை குறைக்கச் சொல்லி கேட்டு வருவதால், பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைந்து வருகிறார்கள். இதனால் ஐடி நிறுவனங்களில் புதிய வேலை வாய்ப்பு சதவிகிதமும் குறைந்து காணப்படுகிறது. 2013-14-ம் ஆண்டின் நிலவரப்படி ஐடி நிறுவனங்களின் மொத்த செலவுகளில் 60% செலவுகள் பணியாளர்களுக்காக செய்யப்படுகின்றன என்று கிரிஸில் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP