Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை: 11 லட்சம் கோடி!

பங்குச் சந்தை ஏற்றம் மற்றும் வலுவான மூலதன முதலீடு காரணமாக,  கடந்த அக்டோபர் 31, 2014- நிலவரப்படி மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக ஆம்ஃபி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 45 ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு 10,95,653 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 9,59,415 கோடி ரூபாயாக இருந்தது.

சமீப மாதங்களாக சிறு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதாக மியூச்சுவல் ஃபண்டு துறை நிபுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு மே மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடியாக அதிகரித்தது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ