Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிகரலாபம் 95.16 கோடி!

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30, 2014-ம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் நிகர லாபம் 1.67% அதிகரித்து, 95.16 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 93.59 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல நிறுவனத்தின் நிகர வருமானம் 12.73% அதிகரித்து 2,298.16 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 2,038.47  கோடி ரூபாயாக இருந்தது. 

அரையாண்டு அடிப்படையில் 2014-15-ம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 17.71% அதிகரித்து 172.86 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே அரையாண்டில் 146.84 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல நிறுவனத்தின் நிகர வருமானமும் 3,918.28 கோடி ரூபாயிலிருந்து 4,624.33 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 

இன்று பங்குச் சந்தை முடியும் போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ. 3.05 குறைந்து 298.25 ரூபாய்க்கு வர்த்தகமானது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ