Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதித்துறைக்கு புதிய செயலாளர்!

 

மத்திய நிதிதுறையின் புதிய செயலாளராக ராஜீவ் மெஹ்ரிஷி நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதர விவகாரத்துறையில் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இவர் மத்திய நிதி அமைச்சகத்தின் பரிந்துறையின் பேரில் நிதித்துறை செயலாளராக பதவி ஏற்கிறார்.  நிதி துறையின் முதன்மை செயலாளராக பணி அனுபவம் கொண்டவர்களை செயலாளர்களாக நியமிக்கும் அதிகாரம் நிதி அமைச்சகத்துக்கு உள்ளது.
அந்த வகையில் ராஜீவ் மெஹ்ரிஷி  இந்த பதவிக்கு பரிந்துறைக்கப்பட்டுள்ளார் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
 
1978 ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற ராஜீவ் மெஹ்ரிஷி நிதி அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  வருமானம், செலவுகள், பங்கு விலக்கம் மற்றும் நிதுச்சேவைகள் உள்ளிட்ட பல துறைகளிலும் தகுதியுடைய முதன்மை செயலாளர்கள் இருக்கிறார்கள். என்றாலும் அவர்களைவிடவும் பணிமூப்பு அடிப்படையில் இந்த பணிக்கு பொருத்தமானவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பொருளாதர விவகாரத்துறை செயலாளராக கடந்த மாதம்தான் ராஜீவ் மெஹ்ரிஷி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ