Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 68 புள்ளி குறைவு.

 

 

சென்செக்ஸ் 68 புள்ளி குறைவு.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை 28 ஆயிரம் என்ற புதிய உச்சத்தில் வர்த்தகமானது. ஆனால் 11 மணி அளவில் லேசாக சரிய ஆரம்பித்த சந்தை தொடர்ந்து மந்த நிலையில் வர்த்தகமானது. இதையடுத்து இறக்கத்திலே சந்தை முடிவடைந்தது. அதாவது சென்செக்ஸ் 68 புள்ளிகள்  குறைந்து 27940 என்ற நிலையிலும், நிஃப்டி 25 புள்ளிகள் குறைந்து 8357 என்ற நிலையிலும் முடிவடைந்தது. 

இன்றைய வர்த்தகத்தில் ஹெச் சிஎல் டெக்( 2.44%), இன்ஃபோசிஸ்( 1.77%), பவர் கிரிட் கார்ப்( 1.19%), லூபின்(1.08%) விலை அதிகரித்து வர்த்தகமானது. பெட்ரோல், டீசல்களுக்கான காலால் வரியை அரசு உயர்த்தியது. இதன் விளைவாக பிபிசிஎல்(4.55%),கெயிர்ன் இந்தியா( 3.60%) என் எம்டிசி( 3.08%) சரிந்து வர்த்தகமானது.

ஆயில் மற்றும் கேஸ், ஆட்டோ, பேங்க், கேப்பிட்டல் கூட்ஸ் துறைகள் வீழ்ச்சி அடைந்தும், ஹெல்த்கேர்,ஐடி, டெக்னாலாகி துறைகள் வளர்ச்சியடைந்தும் வர்த்தகமானது. 

 

2.30  மணி நிலவரம்

சந்தை தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 2.30  மணி நிலவரப்படி 86 புள்ளிகள் உயர்ந்து 27,995  (0.30%) என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 14.05 புள்ளிகள் உயர்ந்து 8376.42 (0.42%) என்கிற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.  இன்று மதியம் வரையிலான வர்த்தகத்தில் சென்செக்ஸ் உச்ச அளவாக 28126 புள்ளிகள் புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. 
 
ஆட்டோ மொபைல், வங்கித்துறை மற்றும் எஃப்எம்சிஜி  துறை பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாகிறது.  குறிப்பாக  ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ்,  அம்புஜா சிமெண்ட்ஸ் , ஐடிஎஃப்சி, நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.  இந்த நிலையில்  பவர் கிரிட் கார்பரேஷன், டாடா பவர், என்டிபிசி ,சிப்லா, சன் பார்மா  நிறுவனப் பங்குகளின் விலை சரிந்துள்ளது. 
 
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 61.49 ஆகவும், 10 கிராம் தங்கத்தின் விலை 25,846  ஆகவும் உள்ளது.

1.00 மணி நிலவரம்

நிஃப்டி புதிய உச்சம் 8400!
கடந்த ஒருவாரமாக பங்குச் சந்தை உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. இன்று நிஃப்டி 8400 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 
இன்று ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குச் சந்தை  தொடர்ந்து ஏற்றத்திலே வர்த்தகமாகி வருகிறது. அதாவது போனவாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 28 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சந்தை சரிந்து 27 ஆயிரம் என்ற நிலையில் வர்த்தகமாகி வந்தது. ஆனால் இன்று புதிய உச்சத்தில் தொடர்ந்து  வர்த்தகமாகி வருகிறது.  
 
சென்செக்ஸ் சுமார் 156 புள்ளிகள் உயர்ந்து 28066 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 34 புள்ளிகள் அதிகரித்து 8397 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இதை அடுத்து நிஃப்டி 9200 என்ற இலக்கை இந்த வருடத்தின் இறுதிக்குள் அடைந்துவிடும் என்று பங்குச் சந்தை  வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். 

 

11.00 மணி நிலவரம்:


இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை 11.00 மணி அளவிலும் தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 166.92 புள்ளிகள் உயர்ந்து 28076.98 (0.60%) என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 37.95 புள்ளிகள் உயர்ந்து 8400.60 (0.45%) என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

இந்நிலையில் பஜாஜ் ஆட்டோ , டாடா மோட்டார்ஸ், பிஹெச்இஎல், அம்புஜா சிமெண்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஜிண்டால் ஸ்டீல், பவர் கிரிட் கார்பரேஷன், என்எம்டிசி, லார்சன் அண்டு டர்போ மற்றும் டாடா பவர் ஆகிய நிறுவன பங்கின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

காலை 9:30 நிலவரம்:
 
இன்று காலை ஏற்றத்துடன் துவங்கிய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 28000 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 158 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது. காலை 9:30 நிலவரப்படி சென்செக்ஸ் 28068 புள்ளிகள் என்ற புதிய அளவிலும், நிஃப்டி 8396 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.55 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை 0.25 சதவிகிதம் அதிகரித்து 25,796 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
சர்வதேச சூழல்கள் சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாகியுள்ளன.ஜப்பானில் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பால் யென் மதிப்பு டாலரைவிட ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதும், கச்சா எண்ணெயின் விலை கடந்த 2010 செப்டம்பருக்கு பின் குறைவான விலையாக பேரல் ஒன்று 81 டாலருக்கு விற்கப்படுவதும் சர்வதேச சந்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று வெளியாக உள்ள மேக்ரோ எக்னாமிக் தகவல்கள் ரூபாயின் மதிப்பு மற்றும் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்று 504 பங்குகள் விலை அதிகரித்தும், 141 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. குறிப்பாக டாடா ஸ்டீல், டாடா பவர்,கோல் இந்தியா பங்குகள் விலை அதிகரித்தும், இன்ஃபோசிஸ், விப்ரோ பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ