Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளான ஸ்னாப்டீலின் சேவிங்ஸ் டே!

 சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளான ஸ்னாப்டீலின் சேவிங்ஸ் டே!

 
நேற்று காலை 7 மணிக்கு ஸ்னாப்டீல் தனது சேவிங்ஸ் டே ஆஃபர்களை துவங்கியது. ஸ்னாப்டீல் ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே போல் தனித்தனி பிரிவுகளில் விற்பனை செய்யாமல் ஒரே ஆஃபராக ''ஹவர்லி ஆஃபர்ஸ்'' என்ற பெயரில் குறிப்பிட்ட நேரத்திற்கு அனைத்து பிரிவுகளில் உள்ள பொருட்களுக்கும் 50-60 சதவிகித ஆஃபர்களில் விற்பனை செய்கிறது. இதில் குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ்,பேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள் தான் இடம் பெற்றுள்ளன. 
 
இந்தியாவில் இனி யாரையுமே கடைக்கு போக விடமாட்டோம் என்று கூறும் அளவுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி வழங்குகின்றன. அமேசானின் மிஷன் மார்ஸ், ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேயை தொடர்ந்து தற்போது களமிறங்கியுள்ள ஸ்னாப்டீல் இன்று சேவிங்ஸ் டே என ஆஃபர் தினத்தை அறிவித்து விற்க நினைத்தது.ஆனால் ஆஃபர்கள் ஃப்ளிப்கார்ட் சந்தித்தது போல சொதப்பல்களையே சந்தித்தது.
 
சேவிங்ஸ் டே சொதப்பல்கள் வாடிக்கையாளர்கள் ரீயாக்ஷன்!
 
ஆஃபர் ஆரம்பித்த நேரத்தில் குறைந்த விலைக்கு அதிக ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டன.நிறைய பொருட்கள் ஸ்டாக் இல்லை என்று அறிவிக்கப்பட்டன.இணையதளம் உள்நுழைவதில் சிக்கல் என்ற அறிவிப்பு பல பொருட்களை வாங்கும்போது வந்திருக்கின்றன.
 
காலை செய்தி தாள்களில் ஒரு போனின் ஆஃபர் விலை என அறிவிக்கப்பட்டதற்கும், இணையதளத்தில் உள்ள விலைக்கும் முரண்பாடு இருப்பதாக புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
 
இணையதளத்தில் ஆஃபர் என அறிவிக்கப்பட்டிருக்கும் பொருட்களின் விலை மார்க்கெட் விலையை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். கம்பேர் ஹாட்கே இணைப்பின் மூலம் பொருட்களின் விலை ஏறி இறங்கி இருப்பதையும் புகைப்படங்களாக வெளியிட்டனர்.
 
 
சிலர் இது குறித்த விமர்சனங்களை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இது சேவிங்ஸ் டே அல்ல! வேஸ்டிங் டே என்றும், இன்று ஸ்னாப் டீல் விளம்பரத்துக்கு பயன்படுத்திய பணத்தை தனது இணையதள சர்வரை அப்டேட் செய்ய பயன்படுத்தலாம் என்றும் தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
 
இ-காமர்ஸ் நிறுவனங்கள் அள்ளித்தரும் ஆஃபர்கள் ஆரம்பத்தில் மக்களால் வரவேற்கப்பட்டாலும் தற்போது இந்தியாவில் அதன் மதிப்பு குறைந்தே வருகிறது.இந்த நிறுவனங்களும் ஆஃபர்களில் செய்யும் குளறுபடிகளால் தனது இடத்தை வாடிக்கையாளர்கள் மனதில் இழந்து வருகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ