Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய துணை தலைவர்கள்!

  

இந்தியாவின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் இன்று கூடுதலாக இரண்டு  தலைமை பதவிகளை அறிவித்துள்ளது. முக்கியமாக பேஷன் துறையின் துணைத் தலைவர் ( ரீடெய்ல்),  மற்றும் மனித வள துறையின் துணை தலைவர் ( விநியோகம்) என இரண்டு முக்கிய பதவிகளை உருவாக்கி புதியவர்களை அறிவித்துள்ளது.
 
பேஷன் துறையின் துணை தலைவராக ரிஷி வாசுதேவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு கால்வின் கெவின் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்துள்ளார். பேஷன் மற்றும் ரீடெயில் துறையில் 15 வருடங்கள் அனுபவம் கொண்டவர் ரிஷி வாசுதேவ் இதற்கு முன்பு ஆதித்யா பிர்லா, லூயி பிலிப், போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
 
மனிதவள துறையின் துணைத்  தலைவராக பரமேஷ்வரன் பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த துறையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயட்டா நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். 
 
ஏற்கனவே இ கார்மர்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் ஃபிளிப்கார்ட் இந்த பதவிகளின் மூலம் மேலும் திறமையான இகாமர்ஸ் அனுபவத்தை வழங்கும் என நம்பலாம். 
 
தற்போது ஃபிலிப்கார்டில் 70 வகைகளில் சுமார் 20 மில்லியன் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close