Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 68 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 68 புள்ளிகள் சரிவு! 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை 28 ஆயிரம் என்ற புதிய உச்சத்தில் வர்த்தகமானது. ஆனால் 11 மணி அளவில் லேசாக சரிய ஆரம்பித்த சந்தை தொடர்ந்து மந்த நிலையில் வர்த்தகமானது. இதையடுத்து இறக்கத்திலே சந்தை முடிவடைந்தது. அதாவது சென்செக்ஸ் 68 புள்ளிகள்  குறைந்து 27940 என்ற நிலையிலும், நிஃப்டி 25 புள்ளிகள் குறைந்து 8357 என்ற நிலையிலும் முடிவடைந்தது. 
இன்றைய வர்த்தகத்தில் ஹெச் சிஎல் டெக்( 2.44%), இன்ஃபோசிஸ்( 1.77%), பவர் கிரிட் கார்ப்( 1.19%), லூபின்(1.08%) விலை அதிகரித்து வர்த்தகமானது. பெட்ரோல், டீசல்களுக்கான காலால் வரியை அரசு உயர்த்தியது. இதன் விளைவாக பிபிசிஎல்(4.55%),கெயிர்ன் இந்தியா( 3.60%) என் எம்டிசி( 3.08%) சரிந்து வர்த்தகமானது.
ஆயில் மற்றும் கேஸ், ஆட்டோ, பேங்க், கேப்பிட்டல் கூட்ஸ் துறைகள் வீழ்ச்சி அடைந்தும், ஹெல்த்கேர்,ஐடி, டெக்னாலாகி துறைகள் வளர்ச்சியடைந்தும் வர்த்தகமானது. 
 
2.30 மணி நிலவரம்
தேக்க நிலையில் இந்திய சந்தைகள்!
 
கடந்த ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த இந்திய சந்தைகள் இன்று ஒருவிதமான மந்தநிலை நிலவுகிறது. மத்தியம் 2.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 171  புள்ளிகள் சரிந்து 27840 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 49 புள்ளிகள் சரிந்து 8336 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் பிஹெச் இஎல், சிப்லா, விப்ரோ ஆகிய பங்குகளின் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. 
 
மேலும் வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் சுமார் 15 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.  இந்த நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் டீமின் செயல்பாடுகள் அனைத்து வளர்ச்சிக்கான பாதையில் இருப்பதாலும், இந்த நிறுவனம் தயாரிக்கும் பொருளுக்கான தேவைகள் அதிகரித்தது இந்த நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
 
மேலும் இந்த நிறுவனத்தின் நிர்வாக தலைவர் இன்று அடுத்த மூன்று ஆண்டுகளின் நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும், அதற்கான காரணம் என்ன என்பதை வெளியிட்டுள்ளார். இதனால் இந்த பங்கின் விலை அதிகரித்துள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் சுமார் 85 ரூபாய் விலை அதிகரித்து 619.85 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
 
1.00 மணி நிலவரம்
 
இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை தற்போதைய நிலவரப்படி சற்றே இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.  மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் காலை 10 மணியளவில் 28089 புள்ளிகள் வரை உச்சமாக வர்த்தகம் கண்டது.  பிறகு சரிவில் வர்த்தகமாக தொடங்கிய சந்தை, மதியம் 1.00 மணி நிலவரப்படி 13.56 புள்ளிகள் அதிகரித்து  28023 புள்ளிகளுடன் ஏற்ற இறக்கமாக வர்த்தகத்தை கண்டு வருகிறது. தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி 2 புள்ளிகள் அதிகரித்து 8385 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
ஆட்டோ மற்றும் பேங்கிங் செக்டார் பங்குகள் விலை ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக லுபின்( 2.15%) ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் ( 2.11%), பிஹெச்இஎல்(1.92%) எனவும், பிபிசிஎல்(-4.53), என்எம்டிசி(-2.50), கெய்ரன் இந்தியா(-2.6) எனவும் வர்த்தகம் ஆகிறது
   
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.55 ரூபாயாகவும், 10 கிராம் தங்கத்தின் விலை 25,771 ரூபாய் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.
 
சர்வதேச சூழல்கள் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு காரணமாகியுள்ளன. அமெரிக்க சந்தைகள் நிலையாக முடிவடைந்துள்ளதும், ஐரோப்பிய சந்தைகளின் இறக்கமும் இந்திய சந்தையின் ஏற்ற இறக்த்திற்கு காரணமாகியுள்ளன.  

 

 

 

 

11.00 மணி நிலவரம்:

 இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை 11 மணி அளவில் இறங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 19.96 புள்ளிகள் குறைந்து 27988.94 (-0.07%) என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 10.30 புள்ளிகள் குறைந்து 8373.00 (-0.12%) என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

இந்நிலையில் ஹெச்சிஎல், லுபின், சிப்லா, பிஹெச்இஎல், விப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், பிபிசிஎல், என் எம் டி ஏ, டிஎல் எஃப், கெய்ர்ன் மற்றும் ஐடிஎஃப்சி ஆகிய நிறுவன பங்கின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன
 
 
காலை 9:30 நிலவரம்:
 
இன்று காலை ஏற்றத்துடன் துவங்கிய பங்குச் சந்தைகள் உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 28000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 73 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி சென்செக்ஸ் 28083 புள்ளிகள் என்ற புதிய அளவிலும், நிஃப்டி 8393 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.50 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி  25,788 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
சர்வதேச சூழல்கள் சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாகியுள்ளன.அமெரிக்க சந்தைகள் நிலையாக முடிவடைந்துள்ளதும், ஐரோப்பிய சந்தைகளின் இறக்கமும் சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாகியுள்ளன. கச்சா எண்ணெயின் விலை கடந்த 2010 செப்டம்பருக்கு பின் குறைவான விலையாக பேரல் ஒன்று 80 டாலருக்கு கீழ் விற்கப்படுவதும் சர்வதேச சந்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று 544 பங்குகள் விலை அதிகரித்தும், 148 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. குறிப்பாக சன் பார்மா, ஹின்டால் கோ பங்குகள் விலை அதிகரித்தும், டிசிஎஸ், பிபிசிஎல் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP