Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில்வேயில் அந்நிய முதலீடுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 17 பிரிவுகள்

 ரயில்வேயில் அந்நிய முதலீடுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 17 பிரிவுகள்

 
ரயில்வே உள்கட்டமைப்பில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என முடிவெடுத்தது. இந்த அறிவிப்பில் எந்தெந்த பிரிவுகள் அடங்கும், அதனால் ஏற்படும்  பயன்கள் என்ன என்பதை ஆராய்ந்து அந்த பிரிவுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
இந்த துறைகளில் அந்நிய முதலீட்டை வரவேற்க காரணங்களையும் இதில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி இந்த அந்நிய முதலீட்டில் 17 பிரிவுகள் முதலீடு செய்ய ஏற்ற பிரிவுகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 
இந்த பிரிவின் கீழ் பயோ-கழிவறை அமைக்கும் பிரிவு, அதனை பராமரிக்கும் பிரிவு, நீண்ட தூர ரயில் பயணங்களில் இருக்கும் சலவை செய்து தரும் பிரிவு, தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள், அதற்கான பரமரிப்பு, தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள், அதனை சோதனை செய்யும் செயல்முறை கூடங்கள்,மின்மயமாக்கல், சிக்னல் மேலாண்மை, லாஜிஸ்டிக்ஸ் பிரிவு.அதிவேக ரயில்களின் நெட்வொர்க் அமைத்தல் ஆகியவற்றை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
 
இந்த பிரிவுகளில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் போது ரயில்வேதுறை சர்வதேச அளவில் மேம்பாடு அடையும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close