Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதித்துறை மறுசீரமைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு!

 

நிதித்துறை சார்ந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவாக முடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த அறிக்கையும் கேட்டுள்ளார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது  நிதித்துறை சட்டத்திருத்த குழு அளித்த சீரமைப்பு நடவடிக்கைகளில் இதுவரை செயல்படுத்தியுள்ள விவரங்கள் வேண்டும் என பிரதமர் அலுவலகத்திலிருந்து நிதி அமைச்சகத்தை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 
 
நிதித்துறை சட்டங்களை மறுசீரமைப்பது குறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்த 2010-11 காலத்தில் இதெற்கென ஒரு குழு அமைக்கப்பட்டது.  இந்த குழுவின் செயல்பாடுகள்
குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் பிரதமருக்கு
குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் இது குறித்து அறிக்கை கோரியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
முக்கியமாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமாகும் காரணம் குறித்து இந்த அறிக்கை இருக்கும் என தெரிகிறது. இந்த நிலையில்தான் இதுவரை நிதித்துறை செயலாளராக இருந்த அரவிந்த் மாயராம் மாற்றப்பட்டு நிதித்துறையின் புதிய செயலாளராக ராஜீவ் மெஹ்ரிஷி  நியமிக்கப்பட்டுள்ளார்.  
 
நிதிதுறை சீர்த்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு வகையில் 60 சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. 1930க்கு முன்னர் இருந்த சட்டங்கள் கூட இப்போது இருந்து வரும் நிலையில் இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி), ஐஆர்டிஏ, பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி, ஃபார்வேர்டு மார்கெட்டிங் கமிஷன் உள்ளிட்ட நிதித்துறை சார்ந்த அமைப்புகள் எல்லாவற்றுக்கும் ஒரே வகையிலான நிதிக்கொள்கைகள் வகுப்பதும்,  இந்த நிதித்துறை அமைப்புகள் தனித்து இயங்குவதற்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இந்த குழு ஏற்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த கண்காணிப்பு காரணமாக நிதித்துறை சீர்த்திருத்தம் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அரசு நிர்வாகம் சீராக நடப்பதற்கு எல்லா வகையிலும், துறைகளிலும் சீர்த்திருத்த நடவடிக்கைகள் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ