Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல் டீசல் விலை உயருகிறது!

பெட்ரோல் டீசல் விலை ரூ 1.50 உயர்வு! 
 
பெட்ரோல் டீசல் விலையை ரூ. 1.50 வரை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தன எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள். இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை இன்று உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இந்த வரி உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ1.50 வரை விலை உயருகிறது.
 
 
ஏற்கனவே சாதாரண பெட்ரோலுக்கு ரூ1.20 என்று இருந்த காலால் வரியை ரூ.2.70 என்றும், பிராண்டட் பெட்ரோலுக்கு ரூ.2.35 என்று இருந்த வரியை ரூ.3.85 என்றும் உயர்தியுள்ளது. அதுபோல பிராண்டட் டீசலுக்கு ரூ.3.75 என்கிற அளவில் இருந்த கலால் வரியை ரூ5.25 எனவும், சாதாரண டீசலுக்கு ரூ 1.46 என்று இருந்ததை ரூ.2.96 எனவும்  உயர்த்தியுள்ளது.  இந்த வரி ஏற்றத்தின் மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இதன் மூலம் அரசின் பற்றாக்குறையை சரிசெய்யமுடியும் என்கிற மத்திய அரசு.
 
கடந்த ஆண்டு 2013 செப்டம்பர் மாதத்தில் ரூ. 76 என்கிற உச்ச அளவில் இருந்த பெட்ரோல் விலை தற்போது 64.24 என்றும், டீசல் விலை 58.97 லிருந்து 53.35 எனவும் குறைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சுமார் 25 சதவிகிதம் வரை சரிந்ததன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களும்   பெட்ரோல் டீசல் விலையை குறைத்தன. இந்த நிலையில் இன்று கலால் வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தால் விலைவாசி உயர்வும் கட்டுக்குள் இருக்கும். இதன்மூலம் பணவீக்க விகிதம் குறைவதற்கான சாதகமான சூழ்நிலை இருந்தது.  இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மீது கூடுதலாக கலால் வரி விதித்துள்ளதன்  மூலம் விலைவாசி மேலும் அதிகரிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.
 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ