Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிறுவனங்களின் காலாண்டு முடிவு!

 நிறுவனங்களின் காலாண்டு முடிவு!


யுனிடெக் நிறுவனம், நால்கோ, பாரத் பெட்ரோலியம், டாடா ஸ்டீல் மற்றும் எய்ஸர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கின்றன. அதன்படி இந்த நிறுவனங்களின் ஃபைனான்ஷியல் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை இனி பார்க்கலாம்... 

யுனிடெக் நிறுவனம்:
யுனிடெக் நிறுவனத்தின் நஷ்டம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவின் படி 14.7 கோடி ரூபாயாக உள்ளது என்கிற தகவலுக்கு பிறகு இந்த நிறுவனத்தின் பங்கு விலை 7% குறைந்து வர்த்தகமானது. ஆனால் சென்ற நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் லாபம் 25.6 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் 5.6 கோடி ரூபாயாக இருந்தது. 


இந்த நிறுவனத்தின் நிகர விற்பனையும் 36% குறைந்து 384 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 596 கோடி ரூபாயாக இருந்தது. ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் நிகர கடன் 5,900 ரூபாயாக உள்ளது. இன்று இந்த நிறுவனத்தின் பங்கு சந்தை முடியும் போது 1.15 ரூபாய் குறைந்து 19.90-க்கு வர்த்தகமானது.  

நால்கோ நிறுவனம்:
நேஷனல் அலுமினியம் கம்பெனி தனது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவை வெளியிட்டதும் 10% உயர்ந்து வர்த்தகமானது. இரண்டாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 91% அதிகரித்து 341.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 179.2 கோடி ரூபாயாக இருந்தது. 

அதே போல இந்த நிறுவனத்தின் வருமானம் 15% அதிகரித்து 1,995.50 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 1,736 கோடி ரூபாயாக இருந்தது. இன்று சந்தை முடியும் போது 1.75 ரூபாய் உயர்ந்து 60.35 ரூபாய்க்கு வர்த்தகமானது.

பிபிசிஎல்:
நடப்பு நிதி ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 50% குறைந்து 464 கோடியாக உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் தேசிய அளவில் ஆயில் விலை குறைந்திருப்பதுதான். இந்த நிறுவனத்தின் வருமானம் 62,025 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 61,785 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் மொத்த சுத்திகரிப்பு லாப வரம்பு ஒரு பேரலுக்கு 4.38 டாலரிலிருந்து, 2.36 டாலராக குறைந்துள்ளது. 

அதே போல வரி மற்றும் தேய்மானத்திற்கு முந்தைய வருமானம் 36% குறைந்து 1,070 கோடி ரூபாயாக உள்ளது.  இன்று பங்குச் சந்தை முடியும்போது 34.85 ரூபாய் குறைந்து 7730.45 ரூபாய்க்கு வர்த்தகமானது.

டாடா ஸ்ட்டீல்:
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 37% அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 917 ரூபாயாக இருந்தது. இது தற்போது 1,254 கோடியாக அதிகரித்துள்ளது. 

அதே சமயம் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 2.4% குறைந்து 35,503 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய சந்தை முடிவின்போது 2.90 ரூபாய் அதிகரித்து 471.25 ரூபாய்க்கு வர்த்தகமானது.

எய்ஸர் மோட்டார்ஸ்:
இந்த நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 
53.61% அதிகரித்து 165.03 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் 107.43 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 1,661.64 கோடி ரூபாயிலிருந்து குறைந்து 2,251.25 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்றைய சந்தை முடிவின் போது 40.20 ரூபாய் அதிகரித்து 13,191.85 ரூபாய்க்கு வர்த்தகமானது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ