Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் பங்குச் சந்தை!

 
1.30 நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இந்த வாரம் இரண்டாவது நாளாக உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது.  வாரத்தின் கடைசி வர்த்தக நாளான  இன்று  மதியம் 1.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான   சென்செக்ஸ் 94 புள்ளிகள் அதிகரித்து 28031 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 27 புள்ளிகள் அதிகரித்து 8384 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி மீண்டும் 8400 என்ற புள்ளியை தொடும் என எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
 
அக்டோபர் மாதத்துக்கான மொத்த பணவீக்க விகித முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது   நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு நாளை கடைசி நாள்.  பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுவிட்டன.  இதனால் அந்த நிறுவனங்களின் தற்போதை நிலை என்ன என்பது குறித்து முதலீட்டாளர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும். 
  
ஆட்டோ மற்றும் பேங்கிங் துறை பங்குகள் விலை ஏறியுள்ளன. ஹெல்த் கேர் துறை சார்ந்த பங்குகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. 
 
 ஜிண்டால் ஸ்டீல் (4.46%), ஹிண்டால்கோ (4.08%), கெயில்(2.92%), ஏசியன் பெயிண்ட்ஸ் (2.89%) சேச ஸ்டெர்லைட் (2.72%) ஆகிய பங்குகள் ஏற்றத்திலும்,  சிப்லா(-2.17%), பிஹெச்இஎல்(-1.88%), சன் பார்மா(-1.90%)  டாடா பவர் (-1.41%), கோட்டக் மஹிந்திரா (-1.32%) ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 
 
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.61.63 என்கிற நிலையிலும், 10 கிராம் தங்கத்தின் விலை 25,635 என்கிற நிலையிலும் வர்த்தகம் உள்ளது.
 
 
நிஃப்டி 8400 புள்ளி நோக்கி!
 
11.00 மணி நிலவரம்.
 
 
இந்திய பங்குச் சந்தைகள் இந்த வாரம் இரண்டாவது நாளாக 28 ஆயிரம் என்ற உச்சத்தி வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் இன்று. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 68 புள்ளிகள் அதிகரித்து 28008 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 22 புள்ளிகள் அதிகரித்து 8380 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. 
நிறுவனங்களின் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு கடைசி நாள் நவம்பர் 15.இதில் பெருமபாலான நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுவிட்டது. இதனால் அந்த நிறுவனங்களின் தற்போதை நிலை என்ன என்பது குறித்து முதலீட்டாளர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும். 
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி மீண்டும் 8400 என்ற புள்ளியை தொடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இன்றைய வர்த்தகத்தில் கெயில்(2.81%), பஞ்சாப் நேஷனல் பேங்க்(2.05%), ஓஎன்கிசி(1.92%), எஸ்பிஐ(1.92%)  ஆகிய பங்குகள் விலை அதிகரித்தும், டாடா பவர் (2.65%), சிப்லா(1.57%), சன் பார்மா(1.44%) ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 

 

ஹெல்த் கேர் துறை சார்ந்த பங்குகள் வளர்ச்சி குறைந்து வர்த்தகமாகி வருகிறது. பிற துறைகளில் வளர்ச்சி மிகவும் நன்றாகவே உள்ளது. 

 

 

 நிலையான வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

காலை 9:30 நிலவரம்:

 நேற்றைய நாளின் முடிவில் சரிவில் முடிந்த இந்திய சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் துவங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் மீண்டும் 28000 புள்ளிகளை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 65 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 19 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி சென்செக்ஸ் 28006 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 8376 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.61 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் 0.13 சதவிகிதம் அதிகரித்து  25,822 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
சர்வதேச சூழல்கள் சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாகியுள்ளன.அமெரிக்க சந்தைகள் நிலையாக முடிவடைந்துள்ளதும், யென்னுக்கு நிகரான டாலரின் மதிப்பு 7 ஆண்டுகளில் இல்லாத உயர்வை அடைந்துள்ளதும், ஜப்பானில் விற்பனை வரி அதிகரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதும் ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளன.
 
இன்று 465 பங்குகள் விலை அதிகரித்தும், 222 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. குறிப்பாக சன் பார்மா, விப்ரோ, டாடா மோட்டார்ஸ் பங்குகள் விலை அதிகரித்தும், சிப்லா, கெயில், ஏர்டெல் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ