Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் புதிய உச்சம்! 28100 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் முடிந்தது.

 

 

சென்செக்ஸ் புதிய உச்சம்! 28100 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் முடிந்தது. 

இன்று காலை சந்தை இறக்கத்தில் துவங்கி ஒரு விதமான மந்த நிலையில் வர்த்தமாகி வந்தது. ஆனால் மத்தியத்திற்கு மேல் தொடர்ந்து 28 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாக தொடங்கியது. இதில் சந்தை முடிவில் சென்செக்ஸ் 131 புள்ளிகள் அதிகரித்து 28177 என்ற புதிய  உச்சத்தில் சந்தை முடிவடைந்தது. நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 8430 என்ற நிலையிலும் வர்த்தகம் முடிந்தது.

 

சந்தை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் அக்டோபர் மாதம் வர்த்தக பற்றாகுறை 13.36 பில்லியன் டாலர் உள்ளது. இது கடந்த மாதத்தை விட மிகவும் குறைவும். மேலும் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது ஏற்றுமதி குறைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ(5.48%), பேங்க் ஆஃப் பரோடோ(4.21), டாடா மோட்டர்ஸ்(4.08%), ஏசியன் பெயின்ட்ஸ்(2.94%) விலை அதிகரித்தும், ஜிண்டால் ஸ்டீல்(2.62%) அல்ட்ரா டெக் சிமென்ட்(2.09%), டிஎல்எஃப்(1.83%) ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமானது. 

 

2.30 மணி நிலவரம்!

வாரத் தொடக்க நாளான இன்று காலை மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 28 ஆயிரம் என்ற நிலையை அடைந்து  மீண்டும் 27,900 புள்ளிகளில் ஏற்ற இறக்கமாக வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. மதியம் 1.30 மணிக்கு பிறகு சற்றே ஏற்றம் காணத் தொடங்கிய சந்தை தற்போதைய நிலவரப்படி 60 புள்ளிகள் உயர்ந்து 28,107 என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  இன்று  சென்செக்ஸ் 28,000 என்ற புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் இருக்கும் என்று பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர்.  

தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி 14 புள்ளிகள் உயர்ந்து 8403 புள்ளிகளோடு ஏற்ற இறக்கமாக வர்த்தகம் கண்டு வருகிறது.  

 ஆட்டோ மொபைல்,  பேங்கிங், கன்ஸ்யூமர் டியூரபிள், எஃப்எம்சிஜி துறை பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஹெல்த்கேர், ஐடி, மெட்டல் துறை பங்குகள் இறக்கத்தில் உள்ளன. 

இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ, டாடா மோட்டர்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்தும், டிஎல்எஃப், அல்ட்ரா டெக் சிமென்ட், பிபிசிஎல் நிறுவனப்  பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.66 என்ற நிலையில் உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 26,359 என்கிற அளவில் உள்ளது. 

 

 1:30 மணி நிலவரம்:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. இன்று  மதியம் 1.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான   சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிந்து 28015 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 8375 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. 

ஜப்பானி பொருளாதார வீழ்ச்சி சர்வதேச சந்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் தான் இந்திய சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாகிறது.

எஸ்.பி.ஐ, டாடா மோட்டார்ஸ் பங்குகள் விலை அதிகரித்தும்,டிஎல்எஃப், பிபிசிஎல் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.61.69 என்கிற நிலையிலும், 10 கிராம் தங்கத்தின் விலை 26,321 என்கிற நிலையிலும் வர்த்தகம் உள்ளது.

 

10.30 மணி நிலவரம்

28 ஆயிரத்தை நோக்கி சென்செக்ஸ்

 இந்திய பங்குச் சந்தைகள் இன்று (17.11.2014) இறக்கத்தில் துவங்கி உள்ளது. காலை 10.15 மணியளவில்  மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிந்து 27999 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃபடி 28370 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

 
சென்செக்ஸ் 28 ஆயிரம் என்ற நிலையை அடைந்து  மீண்டும் 27,900 புள்ளிகளுக்கு இடையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இன்று நிச்சயம் 28000 என்ற புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் இருக்கும் என்று பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 
இன்றைய காலை வர்த்தகத்தில் பேங்க், உலோகம், கேப்பிட்டல் கூட்ஸ், எஃப்எம்சிஜி, ஹெல்த்கேர் ஐடி, டெக்னாலாஜி போன்ற துறைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஆட்டோ, ஸ்மால்கேப், ஆயில் அண்ட் கேஸ், மிட்கேப்  போன்ற துறைகள் ஏற்றத்தில் உள்ளது. 
டாடா மோட்டர்ஸ், எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய பங்குகள் விலை அதிகரித்தும், டிஎல் எஃப், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஜிண்டால் ஸ்டீல் ஆகிய பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.69 என்ற நிலையில் உள்ளது.  

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ