Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீன பொருள்களுக்கு வருகிறது கட்டுப்பாடு!

  

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என மத்திய அரசாங்கம் யோசிக்கத் தொடங்கி இருக்கிறது.
 
செல்போன் முதல் சிடி கவர் வரை ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு செய்யப்படுகிறது. இந்தப் பொருட்களின் தரம் பற்றி பல விதமான புகார் எழுந்துள்ளன.
 
முன்னணி மொபைல் பிராண்டான ஜியோமி இந்தியாவில் பரவலான வரவேற்றைப் பெற்றது. ஆனால், இந்த வகை போன்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறைவாக உள்ளது என்கிற பேச்சு இருந்து கொண்டிருக்கிறது. 
அதுபோல சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பல பொருட்களில் மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் குறை உள்ளது என தொழில்துறையினர் புகார் அளித்து வருகின்றனர். 
 
சீனத் தயாரிப்புகள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், இந்திய உற்பத்தியாளர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் சொல்லி வருகின்றனர். மேலும், சீனாவிலிலிருந்து மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு கருவிகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்பதும் மத்திய அரசின் கருத்தாக உள்ளது. 
 
இந்த நிலையில்தான் மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் சுமார் ரூ. 78 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் மொபைல் போனின்  இறக்குமதி மதிப்பு மட்டும் சுமார் 31 ஆயிரம் கோடிக்கு உள்ளது. 
 
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் போன்கள் தவிர, போன் கவர், சிடி, சிடி கவர், செராமிக்ஸ், ஆட்டோ ஷீட் கவர் என சிறு தொழில் பொருட்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வாய்ப்புள்ள இந்த பொருட்களின் இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. இறக்குமதி பொருள்களின்  தர அளவுகளை சரியாக கடைபிடிப்பது, இறக்குமதிக்கான வரிகளை அதிகப்படுத்துவதன் மூலம் இந்த கட்டுப்பாடு இருக்கும் என தெரிகிறது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP