Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிஷான் விகாஸ் பத்திரம் மீண்டும் அறிமுகம்


கிஸான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்வதை மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை 2014-15ம் நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.

மக்களின் சேமிப்பை உயர்த்தும் வகையிலும், எளிதாக நீண்ட காலத்துக்கு சேமிக்கும் வகையிலும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளர்.

கிஸான் விகாஸ் பத்திரம் அனைத்து தபால் நிலையங்களிலும் கிடைக்கும். இந்த பத்திரம் ரூ.1000, ரூ.5000, ரூ. 10,000 மற்றும் ரூ. 50,000 மதிப்புக்கு கிடைக்கும். இதில் முதலீடு செய்வதற்கு பான் கார்டு எண் தேவையில்லை. மேலும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.

இந்த பத்திரத்தை தனிநபர் மற்றும் இருவர் சேர்ந்தும்  முதலீடு செய்ய முடியும். ஒருவர் எத்தனை பத்திரங்கள் வேண்டுமானாலும் வாங்கலாம். மேலும் ஒரு தபால் நிலையத்தில் முதலீடு செய்துள்ள பணத்தை இந்தியாவில் உள்ள எந்த தாபால் நிலையத்துக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் இந்த பத்திரத்தை  வங்கியில்அடமானம் வைக்க முடியும். அதே போல செக்யூரிட்டீயாகவும் கொடுக்க முடியும்.

இந்த முதலீட்டுக்கு குறைந்தபட்சம் 2 வருடம் ஆறுமாத காலம் ஆகும். அதற்கு அடுத்த ஆறு  ஆறு மாத இடைவெளியில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை வெளியே எடுத்துக் கொள்ள முடியும். 100 மாதங்களில் முதலீடு செய்த தொகை இரட்டிப்பாகும். அதாவது 8 வருடம் 4 மாதங்களில் முதலீட்டு காலம் ஆகும்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ