Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் பங்குச் சந்தை!

3.30  மணி நிலவரம்.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று இறக்கத்தில் முடிவடைந்தது. அதாவது சென்செக்ஸ் 130 புள்ளிகள் குறைந்து 28032 எனவும், நிஃப்டி 43 புள்ளிகள் குறைந்து 8382 என்ற நிலையில் முடிவடைந்தது. இன்று சென்செக்ஸ்  28 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்தது. பிராபிட் புக்கிங் அதிகமாக இருந்தால் நிஃப்டி 8400 புள்ளிகளுக்கு கீழ் முடிந்தது. 

இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ, மெட்டல், எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் கேஸ் ஆகிய துறைகள் இறக்கத்தில் வர்த்தகமானது. ஹெல்த் கேர்,ஐடி, டெக்னாலாஜி ஆகிய துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமானது. 

 

2.30 மணி நிலவரம்:

2.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 151.81 புள்ளிகள் குறைந்து 28011.48 புள்ளிகளோடு வர்த்தகமாகி வருகிறது. தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி 54 புள்ளிகள் சரிந்து 8371.90 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.89 ஆகவும், 10 கிராம் தங்கத்தின் விலை 26,715 ரூபாய் என்ற அளவிலும் உள்ளது.

தற்போதைய நிலையில் டாப் 5 ஏற்ற பங்குகள் பட்டியலில் டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரிஸ், ஹெச்யூஎல், ஜீ எண்டர்டெயின், டிஎல்எஃப், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகளும், டாப் 5 இறக்கப் பங்குகளில் டாடா மோட்டார்ஸ், கேய்ர்ன் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், கெயில் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவன பங்குகளும் வர்த்தகமாகி வருகின்றன.

12.30 மணி நிலவரம்

 
இன்று சந்தை  ஏற்றத்துடன் தொடங்கியது என்றாலும் சற்று நேரத்தில் ஏற்ற இறக்கமான வர்த்தக நிலையை அடைந்தது. 10.30 மணி வாக்கில் ஒரு சரிவை சந்தித்து மீண்டும் ஏற்ற இறக்கமான வர்த்தக நிலையில் உள்ளது.
 
12.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 28160 புள்ளிகளோடு வர்த்தகமாகி வருகிறது. தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து 8420 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.82 ஆகவும், 10 கிராம் தங்கத்தின் விலை 26,627 ரூபாய் என்ற அளவிலும் உள்ளது. ஆட்டோ, கேப்பிட்டல் கூட்ஸ், எஃப்எம்சிஜி துறை பங்குகள் விலை ஏற்றத்திலும், பேங்கிங், ஹெல்த்கேர் துறை பங்குகள் விலை சரிந்தும் வர்த்தகமாகிறது.
 
குறிப்பாக ஹிண்டால்கோ, டிஎல்எஃப், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பிபிசிஎல் நிறுவன பங்குகள் விலை உயர்ந்துள்ளது. சிப்லா, சன் பார்மா, மஹிந்திரா அண்ட் மஹிந்திராம், ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனப் பங்குகள் விலை சரிந்தும் வர்த்தகமாகி வருகிறது. 
 
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் விலை அதிகரித்து தனது 52 வார உச்சத்தை அடைந்தது. 

 

 

ஏற்றத்தில்  சென்செக்ஸ், நிஃப்டி: 52 வார உச்சத்தில் எஸ்.பி.ஐ

 
காலை 9:30 நிலவரம்:
 
இன்று காலை ஏற்றத்துடன் துவங்கிய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 28200 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 61 புள்ளிகள் அதிகரித்தும், நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 28221 புள்ளிகள் என்ற புதிய அளவிலும், நிஃப்டி 8438 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.75 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை 1 சதவிகிதம் அதிகரித்து 26,596 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் விலை அதிகரித்து தனது 52 வார உச்சத்தை அடைந்தது. 
 
குறிப்பாக ஹின்டால்கோ, பிபிசிஎல், பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ