Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள்: 2015-ல் 354 மில்லியன்!

இந்தியாவில் மொபைல் மூலம் இணையம் (internet) பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வளர்ச்சி வலுவாக இருக்கிறது எனவும், இது நடப்பு ஆண்டின் இறுதி மாதத்திற்குள் 302 மில்லியனை தொடும் எனவும், இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 213 மில்லியனாக இருந்தது எனவும் இந்திய இணைய மற்றும் மொபைல் சங்கம் (Internet and Mobile Association of India (IAMAI)) தெரிவித்துள்ளது.

தற்போது மொபைல் மூலம் அதிகமாக இணையத்தை பயன்படுத்துவர்களை கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியா (278 மில்லியன் பயனாளர்கள்) மூன்றாவதாக உள்ளது. முதல் இடத்தில் சீனா (600 மில்லியன் பயனாளர்கள்), அமெரிக்கா (279 மில்லியன் பயனாளர்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளது.

 நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் மொபைல் இணைய பயன்பாடு  32% வளர்ந்து அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று ஐஏஎம்ஏஐ தெரிவித்துள்ளது. அதே போல இந்த வளர்ச்சியானது 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 354 மில்லியனாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் தற்போதுள்ள 278 மில்லியன் இணைய பயனாளர்களில் 177 மில்லியன் பயனாளர்கள் நகர்புறங்களிலும், 101 மில்லியன் பயனாளர்கள் கிராமப் புறங்களிலும் இருப்பவர்கள். டிசம்பர்,2014-ல் இவர்களின் எண்ணிக்கை வளர்சி முறையே 190 மில்லியன் மற்றும் 112 மில்லியனாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 216 மில்லியன் மற்றும் 138 மில்லியனாக இருக்கும் என்றும் ஐஏஎம்ஏஐ தெரிவித்துள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ