Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகமாக வாங்கப்பட்ட பங்குகள்!


சோழமண்டலம் செக்யூரிட்டீஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகமாக வாங்கப்பட்ட பங்குகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

ஆக்ஸிஸ் பேங்க், பாரத் ஃபோர்ஜ், கோல்கேட் பாமோலிவ், டாக்டர் ரெட்டீஸ்  லெபாரட்டரீஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சமீப காலங்களில் அதிகமாக வாங்கப்பட்டுள்ளன. 

இதில் ஆக்ஸிஸ் பேங்க் 485 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. இந்த பங்கின் விலை குறுகிய காலத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆதரவு விலை 460-425 ரூபாய். இந்த பங்கு தற்போது 476 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. அதே போல பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் பங்குகளும் அதிகமாக வாங்கப்படுவதற்கான ஆர்எஸ்ஐ அறிகுறி காணப்படுகிறது. இந்த பங்கில் பிராஃபிட் புக்கிங் நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இதன் ஆதரவு விலை 850-780 ரூபாய்.

கோல்கேட் பாமோலிவ் நிறுவனப் பங்கின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் சிறிய இறக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆதரவு விலை 1860-1750 ரூபாய். இந்த நிறுவனத்தின் பங்கு தற்போது 1,954 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 
 
அதே போல டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தின் பங்கு 3,500 ரூபாயில் புதிய உச்சத்தை தொட்டு, அதிலிருந்து இறங்கி வர்த்தகமாகி வருகிறது. இது 3,300 ரூபாய்க்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ