Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

 

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 34 புள்ளிகள் அதிகரித்து 28067 எனற அளவிலும், நிஃப்டி 19 புள்ளிகள் அதிகரித்து 8401 என்ற நிலையில் முடிவடைந்தது. இன்று சென்செக்ஸ்  28 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 8400 புள்ளிகளுக்கு மேல் முடிந்தது. 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.94 ரூபாயாக உள்ளது. 10 கிராம்ம் தங்கத்தின் விலை 26,521 ரூபாயாக உள்ளது.  இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ, கோட்டக் மஹிந்தரா,கெய்ர்ன் இந்திய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், ஜின்டால் ஸ்டீல், ஜீ எண்டெர்டெயின்மென்ட் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

 

12.00 மணி நிலவரம்.

சரிவில் துவங்கிய இந்திய  பங்குச் சந்தைகள் இறக்கத்திலே இருந்துவருகிறது. சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிந்து 27947 என்ற நிலையிலும், நிஃப்டி 19 புள்ளிகள் சரிந்து 8363 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. 

இன்றைய வர்த்தகத்தில் கோட்டாக் மஹிந்திரா, சிப்லா,எஸ்பிஐ, ஹிண்டால்கோ ஆகிய பங்கு விலைதூயர்ந்தும் , பிஹெச் இஎல், ஜிண்டால் ஸ்டீல்,பேங்க் ஆஃப் பரோடா ஆகிய பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 

கோட்டாக் , ஐஎன்ஜி வைசியா ஆகிய பங்குகள் அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது. 

சரிவில் சந்தைகள்! ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

 

 காலை 9:30 நிலவரம்:

 இன்று காலை இந்திய சந்தைகள் சரிவோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 28000 புள்ளிகளுக்கு கீழ் குறைந்து வர்த்தகமாகிறது. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 7 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 27998 புள்ளிகள் என்ற புதிய அளவிலும், நிஃப்டி 8369 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.11 ரூபாயாக உள்ளது.இது கடந்த 10 மாதங்களில் மிகவும் உள்ள ரூபாயின் மதிப்பை விட குறைவானதாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 0.4 சதவிகிதம் அதிகரித்து 26,711 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
குறிப்பாக ஹின்டால்கோ, எஸ்பிஐ, ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், டாடா மோட்டர்ஸ், ஹீரோ மோட்டார்ஸ்,அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ