Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடல்வீஸ் டோக்கியோ: சென்னையில் புதிய ஆரம்பம்!

எடல்வீஸ் டோக்கியோ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சமீபத்தில் சென்னை கோபாலபுரத்தில் தனது காப்பீட்டு பிரிவு அலுவலகத்தை திறந்துள்ளது. "தென்னிந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் வர்த்தக மையமாகத் திகழும் சென்னையில் திறக்கப்பட்டுள்ள இந்த கிளை மூலம் சிறு கடன்,  நிதியியல் சந்தைகள், சொத்து மேலாண்மை மற்றும் ஆயுள்காப்பீடு ஆகிய அனைத்து சேவைகளையும் வழங்கும்" என எடல்வீஸ் ஃபைனான்ஷியல் சர்வீஸின் துணை நிறுவனர் மற்றும் முழுநேர இயக்குனரான வெங்கட் ராமசாமி தெரிவித்திருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அலுவலருமான தீபக், '' சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எடல்வீஸ் டோக்கியோ லைஃப் இன்ஷூரன்ஸ், தேவை அடிப்படையிலான விற்பனை அணுகுமுறையை பின்பற்றி, வடிக்கையாளர்களின் காப்பீட்டுத் தேவையை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை வழங்க  திட்டமிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த நிறுவனம் வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close