Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 244 புள்ளிகள் உயர்வு!

மதியம் 2.00 மணி நிலவரம்:

இந்திய சந்தைகள் இன்று புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. மதியம் 2.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 244.91 புள்ளிகள் அதிகரித்து 28312.47 என்ற நிலையிலும், நிஃப்டி 74.40 புள்ளிகள் அதிகரித்து 8476.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 10 கிராம் தங்கத்தின்ன் விலை 93 ரூபாய் அதிகரித்து 26,556 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் விலை 0.12 பைசா குறைந்து 61.82 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு யூரோ 77.50 ரூபாய்க்கும், பவுண்டு 96.88 ரூபாய் என்கிற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.

கோட்டக் மஹிந்ரா, பிஎன்பி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நிறுவனப் பங்குகள் ஏற்றத்திலும் , ஜிண்டால் ஸ்டீல், இன்ஃபோஸிஸ் டெக் மஹிந்ரா, டாடா ஸ்டீல், ஹெச்யூஎல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.



 12.30 மணி நிலவரம்.

 இந்திய சந்தைகள் இன்று புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. அதாவது சென்செக்ஸ் 213 புள்ளிகள் அதிகரித்து 28280 என்ற நிலையிலும், நிஃப்டி 66  புள்ளிகள் அதிகரித்து 8468 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் பட்டியலிடப்பட்டுள்ள 30 பங்குகளில் 23 பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. 
 
இன்றைய வர்த்தகத்தில் கோட்டக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, கெயிர்ன் இந்தியா ஆகிய பங்குகள் விலை அதிகரித்தும், இன்ஃபோசிஸ், ஜிண்டால் ஸ்டீல், டெக் மஹிந்திரா ஆகிய பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 
 
ஹெல்த்கேர், ஐடி, மெட்டல், டெக்னாலாஜி ஆகிய துறைகளின் வளர்ச்சி குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆட்டோ, பேங்க், எஃப்எம்சிஜி துறைகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. 
 
 
புதிய உச்சத்தில் சந்தைகள்! கோட்டக் மஹிந்திரா 6% உயர்வு
 
காலை 10:30 நிலவரம்:

புதிய உச்சத்தில் சென்செக்ஸ்! நிஃப்டி!
 
இன்று காலை சற்று சரிவோடு துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றத்தில் புதிய உச்சங்களை தொட்டு வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 0.55 சதவிகிதம் அதிகரித்து 28253 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 0.6 சதவிகிதம் அதிகரித்து 8450 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில் 1242 பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாகின்றன.626 பங்குகள் விலை குரைந்து வர்த்தகமாகின்றன.கோட்டக் மஹிந்த்ரா ஐஎன்ஜி வைஸ்யா வங்கிய வாங்கியுள்ளதால் அதன் பங்குகள் 6 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகின்றன. குறிப்பாக கோட்டக் மஹிந்திரா, சிப்லா, ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் விலை அதிகரித்தும், டாடா பவர்ஸ், இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
 
 காலை 9:30 நிலவரம்:
 
இன்று காலை இந்திய சந்தைகள் சரிவோடு துவங்கியுள்ளன. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 15 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 28052 புள்ளிகள் என்ற புதிய அளவிலும், நிஃப்டி 8400 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாகிறது.
 
சர்வதேச பொருளாதாரங்களில் ஏற்பட்டுள்ள மந்த நிலை இந்த இறக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.85 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை 1 சதவிகிதம் குறைந்து 26,440 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
குறிப்பாக கோட்டக் மஹிந்திரா, சிப்லா, ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் விலை அதிகரித்தும், டாடா பவர்ஸ், இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ