Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃப்யூச்சர் குழுமம், நீல்கிரிஸ் நிறுவனத்தை வாங்கியது!

 ஃப்யூச்சர் குழுமம், நீல்கிரிஸ் நிறுவனத்தை வாங்கியது!

 
 ஃப்யூச்சர் குழுமம், தமிழ் நாட்டின் நீல்கிரிஸ் நிறுவனத்தின் 97.97% பங்குகளை வாங்கி இருக்கிறது.  இதன் மதிப்பு தோராயமாக ரூ. 300 கோடி. இந்தத் தகவலை அடுத்து  ஃப்யூச்சர் குழுமத்தின் ஃப்யூச்சர் கன்ஸ்யூமர் என்டர்பிரைசஸ் பங்கின் விலை வெள்ளிக் கிழமை 9% உயர்ந்தது. 
 
தென் இந்தியாவில் இனி நீல்கிரிஸ் நிறுவனத்தின் பெயரில் ஃப்யூச்சர் குழுமம் தனது வியாபாரத்தை தொடரும். ஃப்யூச்சர் குழுமம் ஏற்கனவே இது போல் பிக் ஆப்பிள், கேபி'ஸ் பேர் பிரைஸ், ஆதார் போன்ற பெயரில் வியாபாரம் செய்து கொண்டிருப்பது, குறிப்பிடத்தக்கது.
 
 
நீல்கிரிஸ் டெய்ரி ஃபார்ம் என்கிற பெயரில் தனக்கு தேவையான அனைத்து பால் பொருட்களையும் தானே தயாரித்து விற்பனை செய்து, தனக்கென  ஒரு முத்திரையை பதித்து விற்பனை செய்தது. நீல்கிரிஸ்-ன் மொத்த விற்பனையில் பால் பொருட்களின் பங்களிப்பு மட்டும் 30%  என்பது குறிப்பிடத்தக்கது. நீல்கிரிஸ் டெய்ரி ஃபார்ம் -ஐயும் இப்போது ஃப்யூச்சர் குழுமம்  வாங்கி இருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close