Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொபைல் பேங்கிங்: மாதம் ரூ.1000 கோடி பரிவர்த்தனையை எட்டியது ஐசிஐசிஐ வங்கி

மொபைல் பேங்கிங்: மாதம் ரூ.1000 கோடி பரிவர்த்தனையை எட்டியது ஐசிஐசிஐ வங்கி
 
ஐசிஐசிஐ வங்கி, மாதாந்திர மொபைல் பேங்கிங்கில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான பரிவத்தனைகளை மேற்கொண்டு, இந்தியாவின் முதலாவது வங்கி என்ற பெருமையை பெற்றுள்ளது. 
ரிசர்வ் வங்கியின் தகவல்களின்படி, ஐசிஐசிஐ வங்கி ரூ.1021 கோடி ரூபாய் அளவுக்கு நிதி பரிவத்தனைகளை ஜூன் மாதத்தில் போன்களின் மூலமாக பெற்றுள்ளது. பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட இந்த உயர்வு நாட்டில் மொபைல் பேங்கிங் துறையில் நான்கில் ஒரு பகுதியை கொண்டிருப்பதுடன் இது ஓராண்டில் மும் மடங்கு உயர்வாகும். 
 
‘‘மொபைல் கருவிகள் மூலமாக நிதி பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது’’ என்று கூறும் பொது மேலாளரும் டிஜிட்டல் சேனல்களின் தலைவருமான அபோண்டி பானர்ஜி. ‘‘விழிப்புணர்வு அதிகரிப்பு. ஸ்மார்ட் ஃபோன்கள் அதிக பயன்பாடு. வசதிக்கான சேவை அதிகரிப்பு மற்றும் போதிய நேரமின்மை ஆகியவை மொபைல் பேங்கிங் சேவைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான உள்ளன’’ என்றார். 
 
மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் உள்ள இந்த தகவல்கள், ஐசிஐசிஐ வங்கி முதல் காலாண்டின் ரூ.2635 கோடிக்கு பரிந்துரைகளை பதிவு செய்திருப்பதும், 2014 நிதியாண்டில் முதல் அரையாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ரூ.5741 கோடிகளின் பாதியாகும். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. இது 941 கோடியிலிருந்து ரூ.2635 கோடியாகியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close