Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்! உச்சத்தில் சென்செக்ஸ்,நிஃப்டி

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்! உச்சத்தில் சென்செக்ஸ்,நிஃப்டி 

 
3.30 மணிநிலவரம்
 
இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டன. சென்செக்ஸ் 164.91 புள்ளிகள் அதிகரித்து சந்தையின் புதிய உச்சமான 28,500 தொட்டு வர்த்தகமானது.சென்செக்ஸ் 28,499.54 புள்ளிகள் என்ற அளவிலும். நிஃப்டி 52.80 புள்ளிகள் உயர்ந்து சந்தையின் புதிய உச்சமான 8,530.15  என்ற அளவில் முடிவடைந்தது.
 
இன்றைய நிலவரப்படி டிஎல் எஃப் 5.06% , ஜின்டால் ஸ்டீல் 4.23%, டாடா பவர் 4.20%, ஹின்டல்கோ 3.34%, இன்போசிஸ் 3.11% அதிகரித்து காணப்பட்டது.
 
பவர்கிரிட் 2.80%, சிப்லா 1.42%, ரிலையன்ஸ் 1.24%, ஏசிசி 0.94% மற்றும் டாடா மோட்டார்ஸ் 0.87% சரிந்து வர்த்தகமானது.அமெரிக்க டாலரின் மதிப்பு 61.87 ரூபாயாக வர்த்தகம் முடிந்தது. கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 76.77 டாலருக்கு வர்த்தகம் முடிந்தது. 
 
 
சென்சென்ஸ் 28426.12, நிஃப்டி 8503.85

 

இன்று காலை இந்திய சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. தற்போது (12.00மணி) 28,422.06 என்ற அளவில் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 8,503.85 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு சீனாவின் பங்கு சந்தை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை 0.49% உயர்ந்து 26,520 ரூபாக்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ. 61.77 ஆக உள்ளது.

 

ஜின்டால் ஸ்டீல், ஹின்டால்கோ, டிஎல்எஃப் ஆகியவைகள் விலை அதிகரித்தும், பவர் க்ரிட், கோட்டக் மஹிந்திரா, ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகிறது.
 
11: 30 நிலவரம்:
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் இன்று காலை 11.30 மணியளவில் 112 புள்ளிகள் அதிகரித்து 28447 என்ற நிலையிலும், நிஃப்டி 28 புள்ளிகள் அதிகரித்து 8506 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தில் ஜிண்டால் ஸ்டீல், ஹிண்டால்கோ ஆகிய பங்குகளின் விலை 4 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
 
மேலும் டிஎல்எஃப், ஜீ எண்டர்டையின்மென்ட், டாடா ஸ்டீல் ஆகிய பங்குகளின் விலையும் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. பவர்கிரிட் கார்ப்ரேஷன், கோட்டாக் மஹிந்திராம, ஹெச்டிஎஃப்சி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ்  ஆகிய பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 

ஐடி, எஃப்எம்சிஜி , ஆயில் அண்ட் கேஸ் ஆகிய துறைகளின் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.  

சென்செக்ஸ் 28500, நிஃப்டி 8500

புதிய உச்சத்தில் இந்திய சந்தைகள்!

 
காலை 9:30 நிலவரம்:
 
இன்று காலை இந்திய சந்தைகள் ஏற்றத்தில் துவங்கி புதிய உச்சங்களை தொட்டு வர்த்தகமாகின்றன. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 28500 புள்ளிகளை கடந்தும், நிஃப்டி 8500 புள்ளிகளை கடத்தும் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 28508 புள்ளிகள் என்ற புதிய அளவிலும், நிஃப்டி 8527 புள்ளிகள் என்ற புதிய அளவிலும் வர்த்தகமாகிறது.
 
சீனாவின் மத்திய வங்கி வட்டிவிகிதத்தை குறைத்துள்ளது. இது சர்வதேச சந்தைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அமெரிக்க சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகமாவதும் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. 
 
கச்சா எண்ணெயின் விலை மீண்டும் ஒரு பேரல் 80 டாலர் என்ற அளவில் வர்த்தகமாவதும், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1200 டாலருக்கு மேல் வர்த்தகமாவதும் சந்தையின் ஏற்றத்தை காட்டுகின்றன. 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.74 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை 0.2 சதவிகிதம் குறைந்து 26,391 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
குறிப்பாக ஹிண்டால்கோ, ஜின்டால் ஸ்டீல், டாடா ஸ்டீல் வங்கி பங்குகள் விலை அதிகரித்தும், கெயில், ஐடிசி, ஏர்டெல் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ