Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த சந்தைகள்! சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிவு.

சரிவில் முடிந்த சந்தைகள்!
 
இன்றைய நாளின் முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 161 பிள்ளிகள் சரிந்து 28338 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 67 புள்ளிகள் சரிந்து 8463 புள்ளிகள் என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன.
 
உற்பத்திதுறை பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.86 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 26,495 ரூபாயாக உள்ளது. 
 

குறிப்பாக பிஹச்இஎல்,ஜி எண்டர்டெயிண்மென்ட்,ஓஎன்ஜிசி பங்குகளின் விலை அதிகரித்தும், ஐடிசி,என்எம்டிசி,டிஎல்எஃப் நிறுவனப்பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.

 

சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவு.

11.30 மணி நிலவரம்.
 
இன்று காலை இறக்கத்தில் துவங்கிய இந்திய சந்தைகள் தொடர்ந்து இறக்கத்திலே வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 99 புள்ளிகள் குறைந்து 28399 என்ற நிலையிலும், நிஃப்டி 45 புள்ளிகள் குறைந்து 8484 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. 
இன்றைய வர்த்தகத்தில் ஜீ எண்டர்டென்மென்ட், பிஹெச்இஎல், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ ஆகிய பங்குகள் விலை உயர்ந்தும், என்எம்டிசி,டாடா ஸ்டீல், ஜீண்டால் ஸ்டீல், பவர் கீரிட் கார்ப்பரேஷன் ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 

 

இந்திய சந்தைகள் இறக்கத்தில் இருப்பதால் பெரும்பாலான துறைகளின் வளர்ச்சி குறைவாகவே உள்ளது. ஆனால் எஃப் எம்சிஜி துறையில் வளர்ச்சி மட்டும் நல்ல நிலையில் உள்ளது. 

 ஏற்ற இறக்கத்தில் சந்தைகள்!

 
காலை 9:30 நிலவரம்:
 
இன்று காலை இந்திய சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 28500 புள்ளிகளை கடந்தது, சென்செக்ஸ் 28519 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 8519 புள்ளிகள் என்ற புதிய அளவிலும் வர்த்தகமாகிறது.
 
சீனாவின் மத்திய வங்கி வட்டிவிகிதத்தை குறைத்துள்ளது. இது சர்வதேச சந்தைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாவதும் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.98 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை 0.3 சதவிகிதம் அதிகரித்து 26,480 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இன்று 476 பங்குகளின் விலை அதிகரித்தும், 277 பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
 
குறிப்பாக சன் பார்மா, சிப்லா, ஏர்டெல் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், கெயில், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ