Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''மேக் இன் இந்தியா'' சென்னையில் செல்போன் தயாரிக்கும் திட்டத்தில் ஷியோமி!

 ''மேக் இன் இந்தியா'' சென்னையில் செல்போன் தயாரிக்கும் திட்டத்தில் ஷியோமி!

 
சீனாவின் ஆப்பிள் என வர்ணிக்கப்படும் ஷியோமி. இந்தியாவில் ஆன்லைன் மூலம் தன் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. 
 
சீனாவில் செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஷியோமி தற்போது இந்தியாவிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் செல்போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ஷியோமியின் இந்திய செயல்பாட்டு தலைவர் மனு ஜெயின் தெரிவித்துள்ளார்.
 
தற்போது மைக்ரோசாஃப்ட் ஒப்பந்தத்திற்கு பிறகு நோக்கியாவின் சென்னை உற்பத்தி தொழிற்சாலை செயல்பாடு இன்றி இருப்பதால் அதனை பயன்படுத்தி கொள்ளும் திட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு நல்ல நிறுவனத்தின் உதவியை தேடிவருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு தயாரித்து போட்டியை சமாளிக்கும் விலையில் தர வசதியாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த ஆண்டில் 100 மில்லியன் செல்போன்களை விர்கும் திட்டத்தில் ஷியோமி இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ