Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!

 இன்றைய நாளின் முடிவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 48 புள்ளிகள் அதிகரித்து 28386 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 8475 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்துள்ளன. 

இன்றைய வர்த்தகத்தில் 1676 பங்குகள் விலை அதிகரித்தும், 1171 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.86 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை நிலையான வர்த்தகத்தில் 26,333 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. 
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
டிஎல்எஃப் 7.19%
கெயில் 2.79%
செஸா ஸ்டெரிலைட் 2.42%
கிராஸிம் 2.27%
ஐடிசி 2.25%
 
 
விலை குறைந்த பங்குகள்:
 
ஜி எண்டர்டெயிண்மென்ட் -4.56%
பாரதி ஏர்டெல் -2.54%
ஜின்டால் ஸ்டீல் -2.21%
ஐசிஐசிஐ பேங்க் -1.55%
ஹச்சிஎல் -1.47%
 

 

மந்த நிலையில் இந்திய சந்தைகள்!

இன்று காலை இறக்கத்தில் துவங்கிய இந்திய சந்தைகள் தொடர்ந்து இறக்கத்திலே வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 55 புள்ளிகள் சரிந்து 28282 என்ற நிலையிலும், நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 8444 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. 

 

இன்றைய வர்த்தகத்தில் கெயில், ஏசியன் பெயின்ட்ஸ், சிப்லா, அல்ட்ரா டெக் சிமென்ட், ஐடிசி ஆகிய பங்குகளின் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.  ஜீ எண்டர்டென்மென்ட்  , ஹெச் சி எல் டெக்னாலாஜி, பாஜாஜ் ஆட்டோ,  ஐசிஐசிஐ பேங்க் ஆகிய பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 

 சரிவோடு துவங்கிய இந்திய சந்தைகள்!

 
காலை 9:30 நிலவரம்:
 
இன்று காலை இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 8 புள்ளிகள் சரிந்து 28329 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 7 புள்ளிகள் சரிந்து 8455 புள்ளிகள் என்ற புதிய அளவிலும் வர்த்தகமாகிறது.
 
அமெரிக்காவில் வெளியாகியுள்ள பொருளாதார தகவல்கள் கலவையாக இருப்பதும் சந்தையின் இறக்கத்துக்கு காரணமாக கூறப்படுகின்றன. கச்சா எண்ணெயின் விலை மீண்டும் ஒரு பேரல் 79 ரூபாய்க்கு சென்றுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா கச்சா எண்ணெய் இருப்பை கடந்த வாரம் 3 மில்லியன் பேரல் அதிகரித்துள்ளது.இது எதிர்பார்ப்பைவிட அதிகம் என்றும் கூறப்படுகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.84 ரூபாயாக உள்ளது.10 கிராம் தங்கத்தின் விலை 0.5 சதவிகிதம் குறைந்து 26,326 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. 
 
குறிப்பாக கெயில், ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ்  நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், டிஎல்எஃப், பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று சிகரெட் சில்லறை விற்பனைக்கு அரசு தடை விதிக்கபோவதாக அறிவித்துள்ளதால்  ஐடிசி நிறுவன பங்குகள் 1.5 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகிறது.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ