Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு தடையில்லை!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு தடையில்லை
 
மக்களவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசோ, உச்ச நீதிமன்றமோ தடை கூறவில்லை என்று கூறினார்.
 
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான சோதனைகள் நிறுத்தப்படவில்லை. அதே போல் சுற்றுச்சூழல் பாதுகாப்புகள் அனைத்தும் சரி செய்த பின்னர் மட்டுமே இவைகள் அனுமதிக்கப்படும் என்றார்.
 
tஹொழில்நுட்ப நிபுணர்கள் குழு நிறுவப்பட்டு மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் சம்பந்தமான பிரச்சனைகளை பரிசீலனை செய்திருக்கிறது. அதில் 6 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதில் 5 பேர் மத்திய அரசு கூறி இருக்கும் பாதுகாப்பு விதிகள் போதாது என்றும், இன்னும் கட்டுப்பாடுகளை அதிகமாக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள்.
 
அதில் 6ஆவது நபராக இருக்கும் ஆர் எஸ் பரோடா மத்திய அரசின் பாதுகாப்பு விதிகள் அனைத்தும் போதுமான அளவு இருக்கிறது என்றும், அதே போல் இருக்கும் நிறுவனங்கள் அதை சரியாக பின்பற்றி வருகிறது என்றும் கூறி இருக்கிறார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ