Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு கூட்டம்....!!!


சீனியர் சிட்டிசன்கள் ஈக்விட்டியில் முதலீடு செய்யலாமா?


நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து மியூச்சுவல் ஃபண்ட் -  செல்வத்தைப் பெருக்கும் முதலீடு என்கிற தலைப்பில் சேலத்தில் விழிப்பு உணர்வு கூட்டத்தை நடத்தின.
இந்தக் கூட்டத்தில் சேலம் நகர் மற்றும் அதன் அருகே உள்ள ஆத்தூர், அம்மாபேட்டையை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்றார்கள். மேலும் நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, வாழப்பாடி, எடப்பாடி, மேட்டூர் அணை கட்டு, அரூர், ஓமலூர் உள்ளிட்டப் பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
 


முதலில் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் எஸ். சுதிர் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த அடிப்படை விஷயங்களை விளக்கி பேசினார்.

 

அடுத்து பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பயிற்சி பிரிவு தலைவர் எஸ். குருராஜ், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள வகைகள், யாருக்கு என்ன ஃபண்ட் ஏற்றது என்பது குறித்து விளக்கி பேசினார். அவர் போட்டுக் காட்டிய வீடியோக்கள், முதலீட்டாளர்கள் இடையே மியூச்சுவல் ஃபண்ட் குறித்து தெளிவை ஏற்படுத்தியது.

"வருட இறுதியில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை தேவைப்படுகிறது என்றால் அதற்கேற்றாற் போல மாதா மாதம் சிறிய அளவு தொகையை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தால் அது உங்கள் தேவைக்கு மிகவும் சரியான தேர்வாக இருக்கும். மேலும் ஓய்வு நிதி திட்டமிடலுக்கும் எஸ்ஐபி முதலீடு பயனுள்ளதாக இருக்கும். சந்தை இறங்குமுகமாக உள்ள போது எஸ்ஐபி தொகையை அதிகரிப்பது அவசியம், தற்போதுள்ள நிலையில் தங்கத்தின் மீதான எஸ்பிஐ யை தொடர்வதும் மேலும் அதிகரிப்பதும் நல்லது "என எஸ். குருராஜ் தெரிவித்தார்.

முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பன் சிறப்புரையாற்றினார். அவர், "ஒரு சிலர் குறுகிய கால முதிலீட்டில் ஆர்வம் செல்லுத்துவார்கள் ஒரு சிலர் நீண்ட கால முதலீட்டின் மீது ஆர்வம் செலுத்துவார்கள். எனவே, முதலீடு என்பது முதலீடு செய்பவரின் மனநிலையையும் தேவையையும் பொறுத்தே அமைய வேண்டும். சில நேரத்தில், குடும்ப சூழ்நிலையையும் சார்ந்தும் முதலீடு அமையும். எனவே, நம்பகமான முதலீட்டு ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்" என்றார்.

கூட்டத்தின் இறுதியில் வாசகர்கள் கேட்ட கேள்விக்கு நிபுணர்கள் விடையளித்தனர்.
 


அப்போது, ''சீனியர் சிட்டிசன்கள் ஈக்விட்டியில் முதலீடு செய்வது சிறந்தது அல்ல என கூறப்படுகிறதே அதற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு எஸ். சுதிர் பதிலளித்தார். " னியர் சிட்டிசன்கள் ஈக்விட்டியில் முதலீடு செய்யக்கூடாது என எந்த சட்டமும் கிடையாது. ஆனால் சீனியர் சிட்டிசன்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு வருமானத்துக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் எனவே ரிஸ்க் அதிகமுள்ள முதலீடுகளில் ஈடுபடுவது பாதுகாபானாது இல்லை. இருந்தாலும் முதலீட்டின் ஒரு பகுதியை பங்குச் சார்ந்த ஃபண்டுகளில் செய்யலாம். நீண்ட காலத்தில் நிதி தேவைப்படும்பட்சத்தில் இந்த ஈக்விட்டி ஃபண்டு முதலீடு பயனுள்ளதாக இருக்கும்." என விடை அளித்தார்.

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டின் மூலம் லாபம் அடைந்ததாக பல முதலீட்டாளர்கள் குறிப்பிட்டார்கள்.

செ.தினேஷ் குமார்.
படங்கள்: க. தனசேகரன்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ