Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உச்சத்தில் பங்குச்சந்தை!

3.30 மணி நிலவரம்!

இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ் தன் புதிய உச்சமான 28,822 புள்ளியை மதியம் 12.08 மணிக்கு தொட்டது. நிஃப்டி தன் உச்சமான 8615 புள்ளியை மதியம் 12.05 மணிக்கு எட்டியது. 3.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 255.08 புள்ளிகள் அதிகரித்து 28693.99 என்கிற நிலையில் வர்த்தகம் நிறைவு பெற்றது. அதேபோல் நிஃப்டியும் 84.60 புள்ளிகள் அதிகரித்து 8578.80 என்கிற நிலையில் முடிவுற்றது.

3.30 மணி நிலவரப்படி தங்கத்தின் விலை 115 ரூபாய்கள் குறைந்து 26,132 விலைக்கு வர்த்தகமானது. கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு ஒன்பது ரூபாய்கள் குறைந்து 4,282 ரூபாய்க்கு வர்த்தகமானது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.23% அதிகரித்து 62.02  வர்த்தகமானது.

பிஎன்பி (7.38%), பேங்க் ஆஃப் பரோடா (7.17%), ஏசியன் பெயின்ட்ஸ் (5.64%), எஸ்பிஐ (5.12%), இன்டஸ் இந்த் பேங்க் (4.07%) ஏற்றத்தில் வர்த்தகமாயின. கெயின் இந்தியா (3.91%), சேஸா ஸ்டெர்லைட் 3.23%, ஜிண்டால் ஸ்டீல் (0.88%), பார்தி ஏர்டெல் (0.84%), கெயில் (0.63%) இறக்கத்தில் வர்த்தகமயின.

 

 

11.00 மணி நிலவரம்

உச்சத்தில் தொடங்கிய பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 310 புள்ளிகள் அதிகரித்து 28,745.98 (1.09%)  என்கிற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 98.25 புள்ளிகள் அதிகரித்து 8,591.90 என்கிற நிலையில் வர்த்தகமாகி வறருகிறது.

தங்கத்தின் விலை தற்போது 138 ரூபாய் குறைந்து 26,110 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெயின் விலை சற்றே ஏற்றம் கண்டு ஒரு பேரல்  4,288 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

தற்போது ஏசியன் பெயின்ட்ஸ், பேங்க் ஆஃப் பரோடா, பி என் பி ஆகிய பங்குகள் நல்ல ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகின்றன. கெயின் இந்தியா, டி எல் எஃப், சீசா ஸ்டெர்லைட் ஆகிய பங்குகள் இறக்கத்துடன் வர்த்தகம் ஆகி வருகின்றன.
 

 

9.30 மணி நிலவரம்

இன்றைய பங்கு சந்தை ஏற்றத்துடனேயே தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 304.45 (1.074%) புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சமான 28,743.34 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 91.50(1.08%) புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சமான 8,585.70 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
தங்கத்தின் விலை 0.44% சரிந்து 26,247 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெயின் விலை குறைந்து 4,291 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.89 ரூபாயாக உள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தில் 1080 பங்குகள் விலை அதிகரித்தும், 267 பங்குகள் விலை குறைந்தும் வர்த்த்கமாகின. ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகின.
 
பிபிசிஎல், கோட்டக் மஹிந்திரா, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய பங்குகள் விலை அதிகரித்தும், கெய்ர்ன் இந்தியா, டிஎல்எஃப் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ