Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் டாப் 10 பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ்!

உலகின் டாப் 10 பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ்!
 
இன்று பங்குச் சந்தை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வர்த்தகமாகிறது. இன்று சந்தை ஆரம்பிக்கப்பட்டவுடன் சென்செக்ஸ் 28700 புள்ளிகளை கடந்தும், நிஃப்டி 8600 புள்ளிகளை கடந்தும் வர்த்த்கமானது. 
 
இதனையடுத்து மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸின் மொத்த மார்க்கெட் கேப்பிட்டல் மதிப்பு 100 லட்சம் கோடியை தாண்டியது. இந்திய சந்தை ஒன்று இந்த மதிப்பை தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.
 
இதனால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் உலக அளவில் 10வது இடத்தை பிடித்தது. உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் 10வது இடத்தை சென்செக்ஸ் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மட்டும் மார்க்கெட் கேப்பிட்டல் 500 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது ஆஸ்திரேலிய, கொரிய, ஸ்பெயின் பங்குச் சந்தைகளை விட அதிகம். ஜனவரியிலிருந்து அக்டோபருக்குள் 32.39 கோடி பங்குகள் வர்த்தகமாகியுள்ளன. இதன் அடிப்படையில் உலக அளவில் 8வது இடத்தை சென்செக்ஸ் பிடித்துள்ளது.
 
இதுவரை 5527 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 2.66 கோடியாக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ