Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தின் விலை கடுமையான சரிவு. ஒரு கிராம் ரூ. 2400 கீழ் விற்பனை!

 

தங்கத்தின் விலை கடுமையான சரிவு.  ஒரு கிராம் ரூ. 2400 கீழ் விற்பனை!
தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது.
 

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவிகித தங்கத்தை ஆபரணமாக மாற்றி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த கட்டுபாட்டை முழுமையாக மத்திய அரசு நீக்கி உள்ளது. இதனால் தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது.

மேலும் ஜரோப்பிய நாடுகளில் தங்கத்தின் மீது வர்த்தகம் செய்வதில் இருந்த கட்டுபாடுகளை நீக்கி ஃப்ரீ டிரேட் செய்யலாம் என்ற விதிமுறை நீக்கியுள்ளது. 

இந்த விதிமுறை தொடர்ந்தால் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்பதால் இந்த கட்டுபாட்டை கொண்டு வந்துள்ளது. இதன் விலைவாக உலக சந்தையிலும் தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை 18976 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்று (1.12.2014) ஒரு கிராம் தங்கத்தின் விலை 2372 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த இரண்டு வருடத்தில்  ஒரு கிராம் தங்கத்தின் விலை 2400 கீழ் சரிய ஆரம்பித்துள்ளது. விலை சரிவின் தாக்கம் இனிமேல்தான் தெரியும். 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ