Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்லைன் ஷாப்பிங் வருமானம்: ஸ்மார்ட்போன் பங்களிப்பு 70%

இன்றைய நிலையில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது அதிகரித்து விட்டது. கேட்ஜெட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், மளிகை சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் இன்று ஆன்லைன் மூலமே பெரும்பாலும் வாங்கப்படுகின்றன. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், ஆன்லைன் மூலம் ஷாப்பிங் மேற்கொள்பவர்கள் சமீப காலமாக தாங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறார்கள் என்பதுதான். வர்த்தக ஆன்லைன் நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் ஸ்மார்ட்போன்கள் மூலமான ஷாப்பிங்   மூலம் 70% வரை வருமானம் கிடைக்கிறது என்பது சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.  
 
இ-காமர்ஸ் நிறுவனத்தின் ஜாம்பவானக இருந்துவரும் அமேஸான் நிறுவனத்தின் இந்திய பிரிவின் துணைத் தலைவர் மற்றும் மேலாளர் அமித் அகர்வால், "தற்போதைய நிலையில் எங்களுக்கு 40%க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் மொபைல்கள் மூலம் பெறப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார். 
 
 
"இ-காமர்ஸ் நிறுவனமாக ஸ்னாப்டீல் நிறுவனத்துக்கு மொபைல் மூலம் வரும் ஆர்டர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், இது தற்போதைய நிலையில் 60%-ஆக இருக்கிறது, நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 75%-ஆக அதிகரிக்கும்" என இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் குனால் பால் தெரிவித்திருக்கிறார்.   
 
அதே போல, மந்த்ரா டாட்காம் நிறுவனத்திற்கு தற்போதைய நிலையில் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் பெறப்படும் ஆர்டர் 50%-ஆக இருப்பதாகவும், இது நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் 70%-ஆக  அதிகரிக்கும என்றும் அந்த நிறுவனத்தின் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ஷமிக் ஷர்மா தெரிவித்திருக்கிறார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close