Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக்கின் புதிய நெறிமுறை: லைக் செய்யாத இ-கமார்ஸ் நிறுவனங்கள்!

 ஃபேஸ்புக்கின்  புதிய நெறிமுறை: லைக் செய்யாத இ-கமார்ஸ் நிறுவனங்கள்!

 
ஃபேஸ்புக் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் புதிய நெறிமுறைகளை அறிமுகம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. இதில் கட்டணம் செலுத்தாத விளம்பரங்களை அதிகமாக விளம்பரப்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பால் தான் ஆன்லைன் நிறுவனங்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளன. ஏனேன்றால் ஆன்லைன் நிறுவனங்களின் விற்பனை பெரும்பாலும் சமூக வலைதல விளம்பரங்களை நம்பியே உள்ளது. அது மட்டுமின்றி சில சமயம் கட்டணம் செலுத்தியோ அல்லது கட்டணமில்லாமலோ நிறுவனங்கள் சமூக வலைதலங்களில் தங்களது தயாரிப்பு பற்றிய விவரங்களை மக்களிடம் சேர்த்து வந்தது.
 
இனி ஃபேஸ்புக் தனது விளம்பரங்களை கட்டுப்படுத்த போகிறது என்பதால் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிருப்தியடைந்துள்ளன. இ-காமர்ஸ் தளங்களை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் சமூக வலைதளங்கள் மூலமாகவே வந்துள்ளது என்பதால் இ-காமர்ஸ் நிறுவனங்களின் மிகப்பெரிய மார்க்கெட்டிங் ஆயுதமாக சமூக வலைதளங்கள் விளங்குகின்றன.
 
என்ன பாதிப்பு?
 
ஃபேஸ்புக் கட்டணமில்லாமல் விளம்பரப்படுத்தப்படும் விளம்பரங்களை குறைக்கபோவதாக கூறியுள்ளது.இந்த அறிவிப்பால் புதிய நிறுவனங்கள் ஆரம்பிக்கும் பக்கங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிகமாக பாதிக்க்ப்படும்.
 
இந்த அறிவிப்புக்கான நோக்கமாக ஃபேஸ்புக் தெரிவித்திருப்பது என்னவெனில், வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்களின் பதிவுகளை அதிகம் பார்க்க வேண்டும் அதனைவிட அதிகமாக இருக்கும் விளம்பரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பது தான் என்கிறது ஃபேஸ்புக்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ