Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாருதி சுசூகி கார் விற்பனை அதிகரிப்பு!

 மாருதி சுசூகி கார் விற்பனை அதிகரிப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் இந்த வருட கார் விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 19.5 சதவிகிதம் விற்பனை அதிகரித்து 2014 நவம்பர்  1,10,147 கார்கள் விற்பனையாகி உள்ளது. இதே கடந்த 2013 நவம்பரில் 92,140 கார்கள் விற்பனையாகி உள்ளது. இதே சமயத்தில் உள்நாட்டு கார்
விற்பனை 17சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த வருடம் நவம்பர் 2013ம் ஆண்டு 85,510 கார்கள் விற்பனையானது. அதே இந்த வருடம் 1,00,024 கார்கள் விற்பனை ஆனது.

வருடத்துடன் ஒப்பிடுகையில் 19.5 சதவிகிதம் விற்பனை அதிகரித்து 2014 நவம்பர்  1,10,147 கார்கள் விற்பனையாகி உள்ளது. இதே கடந்த 2013 நவம்பரில் 92,140 கார்கள் விற்பனையாகி உள்ளது. இதே சமயத்தில் உள்நாட்டு கார் விற்பனை 17சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த வருடம் நவம்பர் 2013ம் ஆண்டு 85,510 கார்கள் விற்பனையானது. அதே இந்த வருடம் 1,00,024 கார்கள் விற்பனை ஆனது.

 

இது மட்டும் இல்லாமல் ஏற்றுமதி இந்த வருடம் 57 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் நவம்பர் மாதத்தில் நடந்தது. இதுவே அக்டோபர் மாதத்தில் கார் விற்பனை 1.1 சதவிகிதம் குறைந்திருந்தது குறிப்பிடதக்கது.
இதன் விளைவாக இந்த பங்கின் விலை இன்றைய வர்த்தகத்தில் 2 சதவிகிதம் அதிகரித்து ரூ. 3392 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ