Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆட்டோ மொபைல் துறையின் விற்பனை 10% அதிகரிப்பு!

 ஆட்டோ மொபைல் துறையின் விற்பனை 10% அதிகரிப்பு!

 
பண்டிகை காலங்களில் சரிவில் இருந்த ஆட்டோமொபைல் துறை நவம்பர் மாத இறுதியில் 10 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பயணிகள் வாகன விற்பனை 7.52 சதவிகிதம் குறைந்து காணப்பட்டது.
 
நவம்பர் மாதத்தில் மாருதி சுசூகியின் விற்பனை மட்டும் 100024 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்து 17 சதவிகித மாற்றத்தை பதிவு செய்தது. இதே போல் ஹியூண்டாய் 6 சதவிகித வளர்ச்சியையும், டாடா மோட்டார்ஸ் 15.9 சதவிகித வளர்ச்சியையும் பதிவு செய்தன. மொத்தத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை 10.3 சதவிகித வலர்ச்சியை பதிவு செய்துள்ளது.
 
வட்டி விகிதம் குறைக்கப்படாமல் இருந்தாலும், எரிபொருட்களின் விலை குறைந்து வருவதால் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அடுத்த மாதங்களிலும் இதே நிலை நீடிக்கும் என்பதால் ஆட்டோமொபைல் துறை டிசம்பர் மாதத்திலும் வளர்ச்சியிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ