Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: சரிவில் சந்தைகள்!

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: சரிவில் சந்தைகள்!
 
இன்று இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 116 புள்ளிகள் குறைந்து 28444 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 31 புள்ளிகள் 8524 புள்ளிகள் என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன.
 
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. இதனால் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.மத்திய அரசு வட்டி விகிதங்களில் மாற்றத்தை ஏற்படுத்தாததும் சந்தையில் நிலவி வந்த எதிர்பார்ப்பை குறைத்துள்ளன.
 
10 கிராம் தங்கத்தின் விலை 1.4 சதவிகிதம் குறைந்து 26,134 ரூபாய்க்கு வர்த்தகமானது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.88 ரூபாயாக உள்ளது.
 
விலை அதிகரித்த பங்குகள்:
 
ஜின்டால் ஸ்டீல் 4.68%
ஹிண்டால்கோ 2.18%
என்எம்டிசி 2.16%
ஐடிஎஃப்சி 1.84%
பாரதி ஏர்டெல் 1.73%
 
விலை குறைந்த பங்குகள்:
 
பிபிசிஎல் -4.27%
ஏசியன் பெயிண்ட்ஸ் -3.39%
கெயில்          -3.06%
எம் & எம் -2.36%
இன்ஃபோசிஸ் -2.22%

 

 சென்செக்ஸ், நிஃப்டி தொடர் சரிவு.

2.00 மணி நிலவரம்

மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 77 புள்ளிகள்  குறைந்து 28,456.72 என்ற நிலையிலும், தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 24 புள்ளிகள் குறைந்து 8,524.10 என்ற நிலையிலும் வர்த்தகமாகின்றது.

10 கிராம் தங்கத்தின் விலை 199ரூபாய் குறைந்து 26,325 ரூபாய்க்கு வர்த்த்கமாகின்றன.கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 0.37% குறைந்து 4,255 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.92 ருபாய்க்கு வர்த்த்கமாகிறது.

 

இன்றைய வர்த்தகத்தில் விலை அதிகரித்த பங்குகள்

ஜின்டால் ஸ்டீஸ் 3.91%  

கெயின் இந்தியா 1.60%

என் எம் டி சி 2.34%

சீசா ஸ்டெர்லைட் 1.59%

ஹிண்டால்கோ 1.55%

 

இன்றைய வர்த்தகத்தில் விலை குறைந்த பங்குகள்

 

பி பி சி எல் 3.00%

ஏசியன் பெயின்ட்ஸ் 3.43%

இன்ப்போசிஸ் 1.96%

எம் எம் 2.60%

ஹெச் சி எல் டெக் 1.68%

 

 

ரிசர்வ் வங்கி  வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதன் விளைவாக பெரும்பாலான வங்கி பங்குகள் விலை அதிகரித்தது.

 காலை 9:30 மணி நிலவரம் 

 
இன்று காலை இந்திய சந்தைகள் சரிவோடு துவங்கின. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 60 புள்ளிகள் சரிந்து 28499 என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 20 புள்ளிகள் சரிந்து 8535 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.
 
இன்று ஆர்பிஐயின் பணவியல் கொள்கை அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இந்த இறக்கம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் 435 பங்குகள் விலை அதிகரித்தும், 431 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 2 சதவிகிதம் அதிகரித்து 26,509 ரூபாயாக உள்ளது.நேற்று விலை குறைந்து வர்த்தகமான கச்சா எண்னெயின் விலை இன்று 1.45 சதவிகிதம் அதிகரித்து ஒரு பேரல் 4,271 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெய்ர்ன் இந்தியா 1.64%
ஜின்டால் ஸ்டீஸ் 1.62%
செஸா ஸ்டெர்லைட் 1.54%
என்எம்டிசி 1.34%
ஓஎன்ஜிசி 0.96%
 
விலை குறைந்த பங்குகள்:
 
பிபிசிஎல் 2.38%
ஏசியன் பெயிண்ட்ஸ் 1.91%
பஜாஜ் ஆட்டோ 1.75%
இன்ஃப்போசிஸ் 1.57 %
ஹீரோ மொடொகார்ப் 1.29%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ