Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையா எம்.சி.எஃப் நிறுவனத்திலிருந்து விலகல்!

 விஜய் மல்லையா எம்.சி.எஃப் நிறுவனத்திலிருந்து விலகல்!

 
விஜய் மல்லையா மங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்ட்டிலைசர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பதிவிலிருந்து விலகியுள்ளதாக அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
கார்ப்ரேட் விவகாரத்துறை அமைச்சகம் மல்லையாவை மீண்டும் கிங் பிஷர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.
 
அதுமட்டுமின்றி, 2013ம் ஆண்டு அக்டோபர் 16 தொடங்கி 5 ஆன்டுகளுக்கு இந்த பதவியில் இவர் தொடர முடியாது என்றும். மேலும் இந்த காலத்தில் அவருக்கு சம்பளம் என்று எதுவும் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது.
 
தற்போது உள்ள நிலையில் யுனைடெட் பிவரேஜ் நிறுவனத்தின் சேர்மனாக மட்டும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கெனவே இவர் வேண்டுமென்றே கடன் கட்டாதவர்கள் பட்டியலில் இடம்பெற்ற நிலையில். இவரை கடன் கொடுப்பவர்கள் கேட்டு கொண்டதன் பேரில் எம்சிஎஃப் நிறுவனத்தை விட்டு விளக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ