Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ஆர்பிஐ

ரெப்போ ரேட், சி ஆர் ஆர், ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய ரிசர்வ் வங்கி இன்று நடந்த காலாண்டு நிதிக் கொள்கை கூட்டத்தில் அறிவித்திருக்கிறது.

 
ரெப்போ ரேட் 8 சதவிகிதமாகவும் சிஆர்ஆர் 4 சதவிகிதமாகவும் தற்போது இருந்து வருகிறது. இந்த விகிதத்தைக் குறைக்க வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு மத்திய அரசிடமிருந்து மறைமுகமாகவும் தொழில் துறை வட்டாரத்தினரிடமிருந்து நேரடியாக கோரிக்கைகள் விடப்பட்டு வந்தது.
 
ஆனால், பணவீக்கம் தொடர்ந்து உச்சகட்டத்தில் இருந்துவரும் நிலையில் முக்கிய வட்டி விகிதங்களைக் குறைக்கும் நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி இல்லை. இதை மறைமுகமாக மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சொல்லி வந்திருக்கிறார்.
 
இதனால் இன்றைக்கு வட்டி விகிதங்களில் பெரிய மாற்றம் எதுவும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவிக்காது என்றே பல நிதி நிறுவனங்களும் வங்கிகளும் ஆய்வு நிறுவனங்களும் கருத்து சொல்லி இருந்தன. எதிர்பார்த்ததைப் போன்றே மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களைக் குறைக்கவில்லை.
 
பணவீக்கம் தொடர்ந்து உயராமல் இருந்தால் மட்டுமே 2015ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் வட்டி விகிதத்தைக் குறைக்க மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close