Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல் ரூ.2.25, டீசல் ரூ1.00 கலால் வரி உயர்வு!


பெட்ரோல் ரூ.2.25, டீசல் ரூ1.00 கலால் வரி உயர்வு!

 கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையும் குறைந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ருபாய்க்கு மேல் குறைந்து உள்ளது. இதே போல டீசல் விலையும் கணிசமாக குறைந்தது. 

தொடர்ந்து இப்படி கச்சா எண்ணெய் குறையும் போது விலையை குறைத்துவிட்டு, மீண்டும் எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் மக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள்
 
என்பதால் மத்திய அரசு கடந்த மாதம் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ரூ,1.50 உயர்த்தியது. 
மீண்டும் நேற்று பெட்ரோல்.டீசல் விலை குறைந்தது. இதன் விளைவாக இன்று பெட்ரோலுக்கு ரூ. 2.25யும், டீசலுக்கு ரூ.1.00 யும் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசுக்கு கணிசமான தொகை வருமானமாக கிடைக்கும் என எதிர்பார்ப்பாக படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ