Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இ-காமர்ஸ் வளர்ச்சி: ஸ்னாப்டீலின் அடுத்த இலக்கு என்ன?

 இ-காமர்ஸ் வளர்ச்சி: ஸ்னாப்டீலின் அடுத்த இலக்கு என்ன?

 
ஸ்னாப்டீல் நிறுவனம் கடந்த மாதம் ஜப்பானின் சாஃப்ட் வங்கியிடமிருந்து 3762 கோடி ரூபாய் நிதி திரட்டியது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஸ்னாம்டீலின் மொத்த வர்த்தக மதிப்பு 1 பில்லியன் டாலர்(6000 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது. பண்டிகை மாதமான செப்டம்பர்-நவம்பரில் இந்த நிறுவனத்தின் மொத்த வர்த்தக மதிப்பு 2 பில்லியனாக உயர்ந்திருந்தது.
 
இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி வழங்கியதே இந்த அதிவேகமான வளர்ச்சிக்கு காரணமானது. இந்நிலையில் தற்போது இந்த நிறுவனம் வரும் மார்ச் 2015ம் ஆண்டுக்குள் தனது மொத்த வர்த்தக மதிப்பை 3 பில்லியன் டாலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. 
 
மேலும் பிரிவுகள் வாரியாக பொருட்களின் எண்ணிக்கையை மேம்படுத்தவும், புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்தவும் உள்ளதாக ஸ்னாப்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 18000 கோடி ரூபாய் என்ற மொத்த வர்த்தக மதிப்பை இல்க்காக கொண்டு செயல்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP