Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க்: 94வது ஆண்டு விழா

தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் தனது 93 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. 94வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழாவை தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. 
 
விழாவில், வங்கியின் முதன்மை மேலாளர் செ.செல்வன்ராஜதுரை வரவேற்றார். பொது மேலாளர்கள் எஸ்.கந்தவேலு, என்.தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை  நிர்வாக அதிகாரியான ஹெச்.எஸ்.உபேந்திரகாமத் வாழ்த்தி பேசினார். 
 
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா&வின் மண்டல இயக்குநர் டாக்டர். ஜே.சதக்கத்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் சேர்மன் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டிருந்தார். பத்தாவது, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் மற்றும் இரண்டாமிடத்தை பிடித்த வங்கியின் ஊழியர் பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
ஒன்பது இடத்தில் பயணியர் நிழற்குடை அமைத்தல், பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு, உணவு தயாரிக்கும் கருவிகள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு காலை உணவு, மதிய உணவு, ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள், விவசாயிகளுக்கு விவசாயக்கடன், சிறப்பு இரத்த தான முகாம், பள்ளி மாணவ,மாணவியரிடையே கலை நிகழ்ச்சிகள், வங்கி ஊழியர்களிடையே விளையாட்டு போட்டி என பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. 
அதுமட்டுமில்லாமல் நெல்லை மாவட்டம் அரியகுளத்தில் 400வது கிளையும் சென்னையில் 777வது ஏ.டி.எம் சென்டரும் துவக்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வி.வி.டி.என்.விக்ரமன், எஸ்.ஆர்.அரவிந்தகுமார், பி.மகேந்திரவேல்,எஸ்.சுந்தர், பி.பிரமாகரன், பி.திருகுமார்வேதநாயகம்,ஏ.சிதம்பரநாதன்,கே.என்.ராஜன்,கே.வி.ராஜன்,,டி.ராஜ்குமார் பொதுமேலாளர் டி.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமேலாளர் எம்.குணசேகரன் நன்றி கூறினார். 
-எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள் : ஏ.சிதம்பரம் 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ