Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்.எம். இக்களுக்கு ஆப்ஸ் வெளியிட்ட கூகுள்!

 எஸ்.எம். இக்களுக்கு ஆப்ஸ் வெளியிட்ட கூகுள்!

 
உலகின் பிரபல தேடுதல் இணையதளமான கூகுள் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்காக புதிய ஆப்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்ஸை பயன்படுத்தி தங்கள் வர்த்தகம் குறித்த தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
 
கூகுள் மை பிசினஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஆப்ஸில் எஸ்எம்இக்கள் தங்கள் தொழில் தொடர்பான தகவல்களை பதிவு செய்தால் அது கூகுளின் மற்ற தயாரிப்புகளான கூகுள்+, கூகுள் மேப்ஸ் போன்றவற்றிலும் தெரியும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் எஸ்.எம்.இக்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆப்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆப்ஸின் மூலம் எஸ்.எம்.இக்கள் எந்த இடத்தில் தங்கள் நிறுவனத்தை நிறுவியுள்ளார்கள்,
 
எஸ்.எம்.இக்கள் தயாரிக்கும் பொருளின் விலை என்ன என்பது வரை அனைத்துயும் பதிவு செய்து வைக்கலாம். இது அனைவரும் பார்க்கும் விதமாக இருப்பதால் தொழில் வாய்ப்புகள் பெருகும் என்று கூகுள் கூறியுள்ளது.
 
இநத ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலசமாக கிடைக்கிற. இதற்கு இணையதள பயன்பாட்டளர்கள் 5க்கு 4.2 ரேட்டிங்கை வழங்கியுள்ளனர். இநத ஆப்ஸ் நேற்று தான் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.vega
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ