Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தலில் போட்டியிடும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மருமகன்!

தேர்தலில் போட்டியிடும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மருமகன்!

 
இங்கிலாந்து வடக்கு யார்க்‌ஷையர் பகுதிக்கான பொதுத்தேர்தலில் ரிச்மாண்ட் பகுதியில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் போட்டியிடுகிறார். இவரது பெற்றோர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர் பிறந்து வளர்ந்தது இங்கிலாந்தில் தானாம்.
 
ரிச்மாண்ட் பகுதியில் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து பதவியில் இருந்த வில்லியம் ஹாக் கடந்த ஜூலை மாதத்துடன் பதவி விலகியதையடுத்து அந்த இடத்துக்குகான தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. 
 
ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் எம்பிஏ படித்த போது நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை சந்தித்து 2009ல் திருமணம் செய்த இவர் தற்போது 34 வயதான ரிஷி சுனக் இங்கிலாந்தின் ரிச்மாண்ட் பகுதிக்கான பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்காக போட்டியிடுகிறார்.
 
இங்குள்ள மக்களுக்கு என் பெற்றோர்கள் சேவை செய்வதை சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன் இதனை தொடரவே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் ரிஷி சுனக். 
 
காட்மாரான் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் ரிஷி சுனக். தனது மனவியுடன் இணைந்து ஒரு டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இங்கிலாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ