Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''பிக் ஆப் ஷாப்பிங் டேஸ்'' ஃப்ளிப்கார்ட் கூறும் டேர்ம்ஸ் & கண்டிஷன் என்ன?

 ''பிக் ஆப் ஷாப்பிங் டேஸ்'' ஃப்ளிப்கார்ட் கூறும் டேர்ம்ஸ் & கண்டிஷன் என்ன?

 
டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை ''பிக் ஆப் ஷாப்பிங் டே'' என்ற ஆஃபரை அறிவித்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில் உங்கள் செல்போன் அல்லது டேப்லெட்டுகளில் ஃப்ளிப்கார்ட்டின் ஆப்ஸஒஇ டவுன்லோடு செய்து அதன் மூலம் நீங்கள் பர்சேஸ் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கு ஆஃபர் வழங்கப்படுவதாகவும். இந்த ஆஃபரில் ஐந்து விதமான ஆஃபர்கள் உள்ளதாகவும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
12 மணி நேரத்திற்கு ஒரு ஆஃபர், டாப் ஆஃபர்கள், சேவ் மோர், வங்கி ஆஃபர், பிரிவு ரீதியான ஆஃபர் என தரம் பிரித்துள்ளது ஃப்ளிப்கார்ட்,இந்த ஆஃபரில் விற்கப்படும் பொருட்களுக்கு அதன் விலை மற்றும் அது இடம் பெற்றிருக்கும் பிரிவை பொருத்தது. மேலும் குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும் என்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
பிக் ஆப்ஸ் ஷாப்பிங் டேயில் பர்சேஸ் செய்வதற்கு சில டேர்ம்ஸ் & கண்டிஷன்களை அறிவித்துள்ளது. அவை  என்ன என்று பார்த்தால்  இந்த ஆஃபர் மொபைல் மூலம் செய்யப்படும் பர்சேஸுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் அதுதவிர மற்ற வழிகளில் செய்யப்படும் பர்சேஸுகளுக்கு அல்ல என்றும் டிசம்பர் 8 முதல் 12ம் தேதி வரை செய்யப்படும் பர்சேஸுகளுக்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும் என்றும் கூறியுள்ளது.
 
இந்த ஆஃபரில் கூறியுள்ள விஷயங்களை மாற்றும் உரிமை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு உள்ளது என்றும், இதனை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல் கூட மாற்ரப்படலாம் என்றும் கூறியுள்ளது. இந்த ஆஃபர்கள் இருப்பு உள்ள ஸ்டாக்களை பொருத்தது. இதனை இந்த நேரத்திலும் மாற்றவும், திரும்ப பெறவும் ஃப்ளிப்கார்ட் நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது என ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது
 
ஏற்கெனவே பிக் பில்லியன் டேயில் ஸ்டாக் இல்லை என்ற விஷயத்தில் கையை சுட்டுக்கொண்ட ஃப்ளிப்கார்ட் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக களமிறங்கினாலும், ஆஃபர்களை விவரங்களை முன்னறிவிப்பின்றி மாற்றியமைக்கும் என்று கூறியுள்ளது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக இல்லை என்று சில வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
 
என்னதான் டேர்ம்ஸ் & கண்டிஷன்கள் இருந்தாலும் ஆப்ஸில் பயன்படுத்தும்போது சர்வர் பிரச்னை, ஸ்டாக் இல்லை என்பது போன்ற பிரச்னைகள் இல்லை. அதோடு ஆஃபர்களும் ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது என்றும் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP